சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரயில்வே சேவை வாரிய உறுப்பினர்கள் ஆய்வு

Added : நவ 13, 2021
Share
Advertisement
குன்னுார்: நீலகிரி மாவட்டத்தில், நுாற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரயிலில் மேம்படுத்த வேண்டிய பணிகள் குறித்து, ரயில்வே சேவை வாரிய உறுப்பினர்கள் நேற்று ஆய்வு செய்தனர்.சிவராஜ் ஹெக்டே, பபிதா, பிரணாப் பர்னா, ராதாகிருஷ்ணன், பொன்.பாலகணபதி உட்பட, 40 பேர் கொண்ட குழுவினர், குன்னுார், ஊட்டி ரயில்வே ஸ்டேஷன்களில் ஆய்வு செய்தனர்.வாரிய உறுப்பினர் பொன். பாலகணபதி கூறுகையில், ''சேலம்

குன்னுார்: நீலகிரி மாவட்டத்தில், நுாற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரயிலில் மேம்படுத்த வேண்டிய பணிகள் குறித்து, ரயில்வே சேவை வாரிய உறுப்பினர்கள் நேற்று ஆய்வு செய்தனர்.சிவராஜ் ஹெக்டே, பபிதா, பிரணாப் பர்னா, ராதாகிருஷ்ணன், பொன்.பாலகணபதி உட்பட, 40 பேர் கொண்ட குழுவினர், குன்னுார், ஊட்டி ரயில்வே ஸ்டேஷன்களில் ஆய்வு செய்தனர்.வாரிய உறுப்பினர் பொன். பாலகணபதி கூறுகையில், ''சேலம் கோட்டத்தில், 275 ரயில்கள் சாதாரண ரயில்களாக இயக்கப்பட உள்ளன. மலை ரயில் இன்ஜினை இயக்குவதற்கான தொழில்நுட்ப பிரச்னைகளுக்கு, தீர்வு காண்பது குறித்து வலியுறுத்தப்படும். குறைந்த கட்டணம் நிர்ணயிக்க, நீலகிரி மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ரயில்வே அமைச்சகம் மற்றும் ரயில்வே வாரியத்திடம் தெரிவித்து தீர்வு காணப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X