அரசியல் செய்தி

தமிழ்நாடு

பிரியங்கா இலவச வாக்குறுதி தேர்தல் கமிஷனிடம் புகார்

Added : நவ 13, 2021
Share
Advertisement
-நமது நிருபர்-உ.பி.,யில் சாத்தியமில்லாத தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் அள்ளித்தெளித்து வரும் நிலையில், இதை கட்டுப்படுத்த வேண்டுமென்று தேர்தல் கமிஷனுக்கு கோவை'கன்ஸ்யூமர் காஸ்' அமைப்பு மனு அனுப்பியுள்ளது. உத்தரப்பிரதேசத்தில், அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 'ஆண்டுக்கு மூன்று காஸ் சிலிண்டர்கள் இலவசம், பெண்களுக்கு அரசு பஸ்களில் இலவச பயணம்' என்று



-நமது நிருபர்-

உ.பி.,யில் சாத்தியமில்லாத தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் அள்ளித்தெளித்து வரும் நிலையில், இதை கட்டுப்படுத்த வேண்டுமென்று தேர்தல் கமிஷனுக்கு கோவை'கன்ஸ்யூமர் காஸ்' அமைப்பு மனு அனுப்பியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில், அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 'ஆண்டுக்கு மூன்று காஸ் சிலிண்டர்கள் இலவசம், பெண்களுக்கு அரசு பஸ்களில் இலவச பயணம்' என்று ஏராளமான வாக்குறுதிகளை அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா அள்ளித் தெளித்து வருகிறார். இத்தகைய வாக்குறுதிகளைக் கட்டுப்படுத்த வேண்டுமென்று, கோவையைச் சேர்ந்த 'கன்ஸ்யூமர் காஸ்' அமைப்பு, கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன், சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தது.
வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் முன், தேர்தல் அறிவிப்பு வந்து விட்டது. வழக்கம்போலவே, இந்தத் தேர்தலிலும் இதுபோன்ற வாக்குறுதிகள் இடம்பெற்றிருந்தன. நடத்தை விதிகளிலேயே, தேர்தல் அறிக்கைகளைக் கட்டுப்படுத்த வேண்டிய தேர்தல் கமிஷன் தன் கடமையைச் செய்யவில்லை என்று, கன்ஸ்யூமர் காஸ் அமைப்பு மனுவில் கூறியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X