பொது செய்தி

இந்தியா

விதிமுறைகளை பின்பற்ற வாகனஓட்டிகளுக்கு வேண்டுகோள்

Added : நவ 13, 2021
Share
Advertisement
பெங்களூரு:''விதிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவதன் மூலம் போக்குவரத்து துறைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்,'' என பெங்களூரு போக்குவரத்து பிரிவு இணை போலீஸ் கமிஷனர் ரவிகாந்தேகவுடா வேண்டுகோள் விடுத்தார்.பெங்களூரு நகர போக்குவரத்து பிரிவு, கெங்கேரி போக்குவரத்து போலீஸ் நிலைய ஒருங்கிணைப்பில், கெங்கேரியில் நேற்று நடத்திய போக்குவரத்து தொடர்பு

பெங்களூரு:''விதிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவதன் மூலம் போக்குவரத்து துறைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்,'' என பெங்களூரு போக்குவரத்து பிரிவு இணை போலீஸ் கமிஷனர் ரவிகாந்தேகவுடா வேண்டுகோள் விடுத்தார்.

பெங்களூரு நகர போக்குவரத்து பிரிவு, கெங்கேரி போக்குவரத்து போலீஸ் நிலைய ஒருங்கிணைப்பில், கெங்கேரியில் நேற்று நடத்திய போக்குவரத்து தொடர்பு கூட்டத்தில் அவர் பேசியதாவது:போக்குவரத்து போலீசார், விதிமுறை மீறல் பெயரில் தேவையின்றி அபராதம் விதிப்பதை வழக்கமாக வைத்துள்ளதாக பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது சரியல்ல.சட்டத்தின் மூலம் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே அபராதம் விதிக்கப்படுகிறது.பாதசாரிகள் நடமாட வசதியாக, நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றப்படும்.

பொது மக்களின் பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் நலமாக வீட்டுக்கு செல்லும் நோக்கில் போக்குவரத்து சட்டங்கள் கொண்டு வரப்பட்டதே தவிர, வேறு எந்த நோக்கமும் இல்லை.போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவதன் மூலம் போக்குவரத்துத்துறைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X