தமிழ்நாடு

இருளர் மக்கள் வாழ்க்கையில்... ஒளி! 12 ஆண்டுகளுக்கு பின் வேலை

Updated : நவ 14, 2021 | Added : நவ 13, 2021
Share
Advertisement
பில்லுார் இரண்டாவது குடிநீர் திட்டத்துக்கு நிலம் தந்த பழங்குடியின மக்களுக்கு, 12 ஆண்டுகளுக்குபின், கோவை மாநகராட்சியில் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கோவையில் உள்ள பெரும்பான்மையான வார்டுகளுக்கு, பில்லுார் அணையில் இருந்து, தினமும், 160 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு, குடிநீராக வினியோகிக்கப்படுகிறது. தற்போது, பில்லுார் மூன்றாவது குடிநீர் திட்ட
இருளர் மக்கள் வாழ்க்கையில்... ஒளி!  12 ஆண்டுகளுக்கு பின் வேலை

பில்லுார் இரண்டாவது குடிநீர் திட்டத்துக்கு நிலம் தந்த பழங்குடியின மக்களுக்கு, 12 ஆண்டுகளுக்குபின், கோவை மாநகராட்சியில் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கோவையில் உள்ள பெரும்பான்மையான வார்டுகளுக்கு, பில்லுார் அணையில் இருந்து, தினமும், 160 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு, குடிநீராக வினியோகிக்கப்படுகிறது. தற்போது, பில்லுார் மூன்றாவது குடிநீர் திட்ட பணிகள் நடந்து வருகின்றன.

கடந்த, 2006-2011ல் நடந்த தி.மு.க., ஆட்சியின்போது, பில்லுார் இரண்டாவது குடிநீர் திட்டத்துக்காக, பில்லுார் அணையில் இருந்து பெரியகோம்பை குகை நுழைவாயிலைக் கடந்து, கோபனாரி காப்புக்காடுகள் வழியே, 1,500 மி.மீ., விட்டமுள்ள ராட்சதக் குழாய் பதிக்கப்பட்டது.நெல்லிமரத்துார் மலைக்கிராமத்தில் வசிக்கும் இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த 12 குடும்பத்தினர், வனத்துறையால் அவர்களுக்குத் தரப்பட்ட 4.8 ஏக்கர் விவசாய நிலத்தை இதற்குக் கொடுத்தனர்.

வனத்துறை நிலத்தை விற்க முடியாது என்பதால், 20 ஆண்டு குத்தகைக்கு எழுதிக் கொடுத்தனர்.அதற்கு ஈடாக, நெல்லிமரத்துார் கிராமத்துக்கு சாலை, குடிநீர் மற்றும் மின் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும்; விவசாயம் செய்ய பாசன வசதி செய்து தரப்படும்; நிலம் கொடுத்தவர்களின் குடும்பங்களில் தலா ஒருவருக்கு, அவர்களின் கல்வித்தகுதிக்கேற்ப, அந்த குடிநீர்த் திட்டத்தில் வேலை அளிக்கப்படும் என, 2009, ஜூன் 22ல், மாநகராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதை நம்பி, பழங்குடியினர் விவசாய நிலத்தைக் கொடுத்தனர். வனத்துறையிடம் வாங்கிய நிலத்துக்கு மாற்றாக, தென்கரை கிராமத்தில் வருவாய்த்துறை நிலம் நான்கு ஏக்கர் வாங்கப்பட்டு, வனத்துறைக்கு மாற்று இடமும் தரப்பட்டது.ஆனால், 12 ஆண்டுகளாகியும் அந்த பழங்குடியின கிராமத்துக்கு எந்த வசதியும் செய்து தரப்படவில்லை; யாருக்கும் வேலையும் வழங்கவில்லை. ஒரு குடும்பத்துக்கு தலா, 26 ஆயிரத்து, 383 ரூபாய் மட்டுமே இழப்பீடு தரப்பட்டிருந்தது.ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், இம்மக்கள் பிரச்னைக்கு விமோசனம் கிடைத்துள்ளது. நிலம் கொடுத்த அக்குடும்பத்தினரில், தலா ஒருவருக்கு வேலை கொடுக்க, மாநகராட்சி முன்வந்துள்ளது.

12 பழங்குடியின குடும்பங்களில் ஒரு பி.இ., பட்டதாரி உட்பட ஐந்து பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர்; சமீபத்தில் சான்றிதழ் சரி பார்ப்பு நடந்துள்ளது.நீண்ட கால போராட்டத்துக்கு, இப்போது விடியல் கிடைத்திருப்பதாக, இருளர் இன மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரம், சில குடும்பங்களுக்கு வாரிசு சான்றிதழ் கிடைப்பது சிரமமாக உள்ளது. கலெக்டர் தலையிட்டு, விரைவாகப் பெற்றுக் கொடுத்து, அரசு பணி கிடைக்க உதவி செய்தால், இந்த பழங்குடியின கிராமம் மட்டுமின்றி, இருளர் இனமே அரசுக்கு நன்றியுடையதாக இருக்கும். - நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X