சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'இது தி.மு.க., ஆட்சி

Added : நவ 13, 2021
Share
Advertisement
'இது தி.மு.க., ஆட்சி என்பதை மறந்துட்டாரா?'திருநெல்வேலியில், தமிழக சிறுபான்மையினர் ஆணையத்தின் கலந்தாய்வு கூட்டம் சமீபத்தில் நடந்தது.அப்போது, ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறுகையில், 'புறம்போக்கு நிலங்களில் சர்ச் கட்டப்பட்டால், அதற்கு அரசு அனுமதி தர முடியாது. எனவே, சொந்த பட்டா இடங்களில் சர்ச் கட்டினால், அந்தந்த மாவட்ட நிர்வாகமே அனுமதியளிக்கும்...'
பக்க வாத்தியம்


'இது தி.மு.க., ஆட்சி என்பதை மறந்துட்டாரா?'



திருநெல்வேலியில், தமிழக சிறுபான்மையினர் ஆணையத்தின் கலந்தாய்வு கூட்டம் சமீபத்தில் நடந்தது.அப்போது, ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறுகையில், 'புறம்போக்கு நிலங்களில் சர்ச் கட்டப்பட்டால், அதற்கு அரசு அனுமதி தர முடியாது. எனவே, சொந்த பட்டா இடங்களில் சர்ச் கட்டினால், அந்தந்த மாவட்ட நிர்வாகமே
அனுமதியளிக்கும்...' என்றார்.அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'நடப்பது தி.மு.க., ஆட்சி என்பதை மறந்துட்டு பேசுறாரா... ஹிந்துக்கள் மட்டும் தான், எதுவும் செய்யக் கூடாது; பிற மதத்தினர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்...'
என்றதும், சுற்றியிருந்தோர் ஆமோதித்தனர்.


'அவர்கள் கூலி தொழிலாளர்கள்!'



நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வு கூட்டம் சமீபத்தில் நடந்தது.அப்போது, பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு கூறுகையில், 'இந்த ஆண்டு சோதனை அடிப்படையில், 250 கி.மீ., சாலைகளை, நான்குவழி சாலையாகவும்; 600 கி.மீ., சாலைகளை, இருவழி சாலையாகவும் மாற்ற திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது...' என்றார்.அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'சேலம் எட்டுவழி சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த, 'யோக்கிய' கும்பலை இப்போது எங்கே காணோம்...' என்றார்.அருகிலிருந்தவர், 'அவங்க எல்லாம் கூலி தொழிலாளிகள்... ஆட்சி மாறியதும், வேலை முடிஞ்சுருச்சுன்னு வீட்டுக்கு போயிட்டாங்க...' என்றதும், சுற்றியிருந்தோர் ஆமோதித்தனர்.


'மக்கள் தலையில் மிளகாய் அரைக்கிறாங்க!'



மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில்
சமீபத்தில் நடந்தது.மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹித்தேஷ்குமார் மக்வாணா, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.பின் அவர், நிருபர்களிடம் கூறுகையில், 'மயிலாடுதுறை மாவட்டத்தில், சராசரியை விட 51 சதவிகிதம் கூடுதலாக மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் உள்ள 700 குளங்களில் 25 சதவிகிதம் கூட தண்ணீர் நிரம்பவில்லை. இது குறித்து உள்ளாட்சித்துறை அதிகாரிகளிடம் கூறி குளங்களில் முழுமையான அளவு தண்ணீரை நிரப்ப ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது...' என்றார்.
அங்கிருந்த இளம் நிருபர் ஒருவர், 'எவ்வளவு மழை பெய்தாலும், குளத்திற்கு தண்ணீர் போகாது; அது தான், திராவிட ஆட்சியாளர்களின் 'நிர்வாக' திறமை... மாறி, மாறி குறை சொல்லியே, மக்கள் தலையில் மிளகாய் அரைச்சுக்கிட்டு வர்றாங்க...' என்றதும், சுற்றியிருந்தோர் ஆமோதித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X