பிரதமர் பங்கேற்கும் பேரணிக்கு வரும் வாகனங்களுக்கு 'டோல்' கிடையாது

Added : நவ 13, 2021
Share
Advertisement
போபால்:மத்திய பிரதேசத்தின் போபாலில் நாளை நடக்க உள்ள பழங்குடியினர் மாநாடு மற்றும் பேரணிக்கு வரும் வாகனங்களுக்கு, 'டோல்' எனப்படும் சுங்கக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளித்து, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.பிரமாண்ட பேரணிம.பி.,யில் முதல்வர் சிவ்ராஜ் சிவ் சவுகான் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. பழங்குடியினத் தலைவரான பிர்ஸா முண்டாவின் பிறந்த நாள் மற்றும்
 பிரதமர் பங்கேற்கும் பேரணிக்கு வரும் வாகனங்களுக்கு 'டோல்' கிடையாது

போபால்:மத்திய பிரதேசத்தின் போபாலில் நாளை நடக்க உள்ள பழங்குடியினர் மாநாடு மற்றும் பேரணிக்கு வரும் வாகனங்களுக்கு, 'டோல்' எனப்படும் சுங்கக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளித்து, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.


பிரமாண்ட பேரணி

ம.பி.,யில் முதல்வர் சிவ்ராஜ் சிவ் சவுகான் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. பழங்குடியினத் தலைவரான பிர்ஸா முண்டாவின் பிறந்த நாள் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு பழங்குடியினரின் பங்களிப்பை கவுரவிக்கும் வகையில், நவம்பர் 15ம் தேதியை பழங்குடியினர் கவுரவ தினமாக கொண்டாட மத்திய அரசு முடிவு செய்தது.

இதன்படி, போபாலில் நாளை நடக்கும் பிரமாண்ட பேரணி மற்றும் மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதற்கான ஏற்பாடுகள் குறித்து முதல்வர் சவுகான், அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.பேரணியில் பங்கேற்க வரும் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணத்தில் விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


எதிர்பார்ப்பு

மேலும், வாகனங்கள் பழுதடைந்தால் உடனே சரி செய்வதற்கான வசதிகள், குடிநீர், உணவு வசதிகளை உறுதிபடுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.இந்தப் பேரணி மற்றும் மாநாட்டில், 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது.


மோடியுடன் சந்திப்பு

அமெரிக்க பார்லிமென்ட் உறுப்பினர்கள் குழுவினர், பிரதமர் நரேந்திர மோடியை டில்லியில் நேற்று சந்தித்து பேசினர்.மூத்த எம்.பி.,யான ஜான் கார்ன்யன், மைக்கேல் கிராபோ, தாமஸ் டியூபர்வில்லே உள்ளிட்டோர் இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்தியா - அமெரிக்க உறவை வலுப்படுத்துவதில், அமெரிக்க எம்.பி.,களின் பங்களிப்புக்கு மோடி நன்றி தெரிவித்ததாகவும், அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X