ரூ.52,000 மோசடி இருவர் கைது

Added : நவ 13, 2021
Share
Advertisement
புதுடில்லி:மொபைல் போனில் 'போன்பி வாலட்' வாயிலாக 52 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த இருவரை, டில்லி போலீசார் கைது செய்துள்ளனர்.டில்லியைச் சேர்ந்தவர் சந்தீப் சர்மா. இவர், தன் மொபைல் போன் தொலைந்து விட்டதாக போலீசில் புகார் செய்தார். இதையடுத்து புதிய மொபைல் போன் வாங்கிய சந்தீப் சர்மா, அதில் தன் 'போன்பி வாலட்' கணக்கில் இருந்து 52 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளதை பார்த்து

புதுடில்லி:மொபைல் போனில் 'போன்பி வாலட்' வாயிலாக 52 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த இருவரை, டில்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
டில்லியைச் சேர்ந்தவர் சந்தீப் சர்மா. இவர், தன் மொபைல் போன் தொலைந்து விட்டதாக போலீசில் புகார் செய்தார். இதையடுத்து புதிய மொபைல் போன் வாங்கிய சந்தீப் சர்மா, அதில் தன் 'போன்பி வாலட்' கணக்கில் இருந்து 52 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து அவர் அளித்த புகாரைத் தொடர்ந்து போலீசார், போன்பி நிறுவனத்திடம் இருந்து சந்தீப் சர்மாவின் பணப் பரிவர்த்தனை விபரங்களை பெற்றனர். அதில் ராகுல் என்பவர், சந்தீப் சர்மாவின் மொபைல் போனை பயன்படுத்தி, சஞ்சய் என்ற நபருக்கு, ஏழு முறை மொத்தம் 52 ஆயிரம் ரூபாய் அனுப்பியது தெரியவந்தது. இதையடுத்து முகுந்த்புரில் பதுங்கியிருந்த ராகுலை போலீசார் கைது செய்தனர்.

அவர் அளித்த தகவலின் அடிப்படையில் சஞ்சய் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 20ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புதிய மொபைல் போனை போலீசார் பறிமுதல் செய்தனர். கம்ப்யூட்டர் நிபுணரான ராகுல், சந்தீப் சர்மா தவற விட்ட மொபைல் போனை எடுத்து, அதன் பாதுகாப்பு அம்சங்களை மாற்றி, போன்பி வாயிலாக பணத்தை சஞ்சய்க்கு அனுப்பியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மொபைல் போன் வாயிலாக பல்வேறு பொருட்கள், சேவைகள் ஆகியவற்றுக்கான பணப் பரிவர்த்தனைகளுக்கு, போன்பி வாலட் 'ஆப்' உதவுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X