பொது செய்தி

தமிழ்நாடு

ராஜராஜ சோழனுக்கு 1,036வது சதய விழா கொண்டாடப்பட்டது.

Added : நவ 13, 2021
Share
Advertisement
தஞ்சாவூர்: தஞ்சையில், ராஜராஜ சோழனின் சதய விழா, நேற்று கொண்டாடப்பட்டது. தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டிய மன்னன் ராஜராஜ சோழனின், 1,036வது சதய விழா, நேற்று (நவ., 12) காலை மங்கள இசையுடன் துவங்கியது. பெரிய கோவில் வளாகத்துக்குள், ஓதுவார்கள் திருமுறையை யானை மீது வைத்து வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. கோவிலுக்கு வெளியே உள்ள ராஜராஜ சோழன் சிலைக்கு, தஞ்சாவூர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்,
ராஜராஜ சோழனுக்கு 1,036வது சதய விழா கொண்டாடப்பட்டது.

தஞ்சாவூர்: தஞ்சையில், ராஜராஜ சோழனின் சதய விழா, நேற்று கொண்டாடப்பட்டது. தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டிய மன்னன் ராஜராஜ சோழனின், 1,036வது சதய விழா, நேற்று (நவ., 12) காலை மங்கள இசையுடன் துவங்கியது.

பெரிய கோவில் வளாகத்துக்குள், ஓதுவார்கள் திருமுறையை யானை மீது வைத்து வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. கோவிலுக்கு வெளியே உள்ள ராஜராஜ சோழன் சிலைக்கு, தஞ்சாவூர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தருமபுர ஆதீனம் கட்டளை சொக்கலிங்க தம்பிரான் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ராஜராஜசோழன், லோகமாதேவி உலோக சிலைகளுக்கு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. தருமபுரம் ஆதீனம் சார்பில், 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு 38 வகையான திரவியங்களால் பேராபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து பெருந்தீப வழிபாடு செய்யப்பட்டது.ராஜராஜ சோழன், லோகமாதேவிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, இரவு பிரகார புறப்பாடு நடந்தது.கெரோனா தொற்று காரணமாக, இரண்டு நாட்கள் நடத்தப்படும் நிகழ்ச்சிகள், ஒரே நாளில் முடிக்கப்பட்டது. இதே போல, கும்பகோணம் அருகே உடையாளுரில், ராஜராஜ சோழனின் சமாதி இருப்பதாக கூறப்படும் இடத்தில், சிவலிங்கத்துக்கு சிறப்பு ஹோமம், அபிஷேகம், அலங்காரம், பூஜை செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X