தாய் மொழியில் பேசுவதே பெருமை :உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சு

Updated : நவ 15, 2021 | Added : நவ 13, 2021 | கருத்துகள் (22+ 106)
Share
Advertisement
வாரணாசி:''தாய் மொழியில் பேசுவதை மக்கள் பெருமையாக கருத வேண்டும்,'' என, மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித் ஷா கூறினார்.உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் நடந்த அகில பாரதிய அலுவல் மொழி மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:ஒவ்வொருவருக்கும் தாய்நாட்டின் மீதும், தாய்மொழியின் மீதும் அதிக பற்று இருக்க வேண்டும். புதிய கல்வி கொள்கைதாய்
தாய் மொழி,பெருமை :உள்துறை அமைச்சர் அமித் ஷா

வாரணாசி:''தாய் மொழியில் பேசுவதை மக்கள் பெருமையாக கருத வேண்டும்,'' என, மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித் ஷா கூறினார்.
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் நடந்த அகில பாரதிய அலுவல் மொழி மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:ஒவ்வொருவருக்கும் தாய்நாட்டின் மீதும், தாய்மொழியின் மீதும் அதிக பற்று இருக்க வேண்டும். புதிய கல்வி கொள்கைதாய் மொழியில் பேசுவதை மக்கள் பெருமையாக கருத வேணடும். தங்கள் குழந்தைகளுடன் பெற்றோர், தாய் மொழியில் தான் பேச வேண்டும். இதில் வெட்கப்படுவதற்கு எதுவும் இல்லை.
அதேநேரத்தில் நாட்டின் அலுவல் மொழியான ஹிந்தியையும் வலுப்படுத்த வேண்டும். எனக்கு தாய் மொழியான குஜராத்தியை விட ஹிந்தி தான் பிடிக்கும். ஹிந்தியில் பேசுவதையும், எழுதுவதையும் பெருமையாக கருத வேண்டும். நாட்டில் அமல்படுத்தப்பட்டு உள்ள புதிய கல்வி கொள்கை, தாய் மொழியில் கல்வி கற்க அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது.

அதேநேரத்தில் அலுவல் மொழியான ஹிந்திக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளது. ஒவ்வொரு மாநிலத்தின் வரலாற்றையும், அலுவல் மொழியான ஹிந்தியில் மொழிமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


கோப்பு

தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்தில் ஒரு கோப்பு கூட ஆங்கிலத்தில் எழுதப்படுவது இல்லை என்பதை பெருமையுடன் தெரிவிக்கிறேன். அலுவல் மொழியான ஹிந்தியில் தான் அனைத்து கோப்புகளும் எழுதப்படுகின்றன. மற்ற துறைகளும் இந்த வழியை பின்பற்றத் துவங்கியுள்ளன.இவ்வாறு அமித் ஷா பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (22+ 106)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.n. Dhasarathan - chennai,இந்தியா
15-நவ-202110:39:25 IST Report Abuse
K.n. Dhasarathan உங்களை போலத்தான் எங்களுக்கும், தாயி மொழியில் பேசுவதுதான் பெருமை என்கிறோம், அதற்கு உடன்படாமல் எண்கள் மீது இந்தி மொழியையும், ஆட்களையும் திணிப்பது எனோ? உங்களுக்கு வலிந்தால் ரத்தம், எங்களுக்கு என்றால் தக்காளி சட்னியா>
Rate this:
Cancel
Arachi - Chennai,இந்தியா
14-நவ-202119:28:10 IST Report Abuse
Arachi இப்போதாவது உணர்ந்தீர்கள் என்பதில் மகிழ்சசியே. இதைத்தான் வலியுறியுறுத்துகிறோம். இதனை துணை குடியரசுத்தலைவர் திரு வெங்கய்யநாயுடு அவர்கள் அடிக்கடி வலியுறுத்துவார் ஒவ்வொரு கூடத்திலும்.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
14-நவ-202119:13:26 IST Report Abuse
Natarajan Ramanathan எனது தாய் மொழி தமிழ். ஆனால் எனக்கு பிடித்தது ஹிந்தியும் ஆங்கிலமும் தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X