பொது செய்தி

இந்தியா

விமானத்தில் உணவு வழங்க அனுமதி

Added : நவ 13, 2021
Share
Advertisement
புதுடில்லி:கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வருவதால் இரண்டு மணி நேரத்துக்குட்பட்ட உள்நாட்டு விமான சேவையின்போது உணவு வழங்க, மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்தாண்டு விமான சேவை நிறுத்தப்பட்டது. இரண்டு மணி நேரத்துக்குட்பட்ட உள்நாட்டு விமான பயணத்திபோது பயணியருக்கு உணவு வழங்க, கடந்தாண்டு, ஏப்., 15ல் தடை விதிக்கப்பட்டது.இந்நிலையில்

புதுடில்லி:கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வருவதால் இரண்டு மணி நேரத்துக்குட்பட்ட உள்நாட்டு விமான சேவையின்போது உணவு வழங்க, மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்தாண்டு விமான சேவை நிறுத்தப்பட்டது. இரண்டு மணி நேரத்துக்குட்பட்ட உள்நாட்டு விமான பயணத்திபோது பயணியருக்கு உணவு வழங்க, கடந்தாண்டு, ஏப்., 15ல் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வருவதால், விமான பயணத்துக்கான பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து, மத்திய சுகாதார அமைச்சகத்தின் ஆலோசனையை, விமான போக்குவரத்து அமைச்சகம் கேட்டுள்ளது.அதன்படி இரண்டு மணி நேரத்துக்கு குறைவான உள்நாட்டு விமான பயணத்தின்போது, பயணியருக்கு உணவு வழங்க அனுமதி அளிக்கப்பட்டுஉள்ளது.
மேலும் விமான ஊழியர்கள் முழு உடலை மறைக்கும் உடைகளுக்கு பதிலாக, முக கவசம், கைகளில் கிளவுஸ் மற்றும் முகத்தை மூடும் தடுப்புகளை மட்டும் பயன்படுத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக விமான போக்குவரத்து அமைச்சகம் விரைவில் அறிவிப்பு வெளியிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X