பொது செய்தி

இந்தியா

சில வரி செய்திகள்...: இந்தியா

Added : நவ 13, 2021
Share
Advertisement
'மாஜி' முதல்வருக்கு வாய்ப்புகோல்கட்டா: மேற்கு வங்கத்தில் ஒரு ராஜ்யசபா இடத்திற்கான இடைத்தேர்தல் நடக்க உள்ளது.இந்த தேர்தலில் கோவா மாநில முன்னாள் முதல்வரான லுாசின்ஹோ பலேய்ரோ, திரிணமுல் காங்., சார்பில் களமிறக்கப்பட்டுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம், காங்., கட்சியில் இருந்து விலகி திரிணமுல் காங்.,கில் பலேய்ரோ இணைந்தது குறிப்பிடத்தக்கது.மாநகராட்சி அதிரடி உத்தரவுதானே:
 சில வரி செய்திகள்...: இந்தியா

'மாஜி' முதல்வருக்கு வாய்ப்பு
கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் ஒரு ராஜ்யசபா இடத்திற்கான இடைத்தேர்தல் நடக்க உள்ளது.இந்த தேர்தலில் கோவா மாநில முன்னாள் முதல்வரான லுாசின்ஹோ பலேய்ரோ, திரிணமுல் காங்., சார்பில் களமிறக்கப்பட்டுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம், காங்., கட்சியில் இருந்து விலகி திரிணமுல் காங்.,கில் பலேய்ரோ இணைந்தது குறிப்பிடத்தக்கது.
மாநகராட்சி அதிரடி உத்தரவு
தானே: மஹாராஷ்டிராவில் கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இங்குள்ள தானே மாவட்டத்தில் அனைவருக்கும் விரைந்து தடுப்பூசியை செலுத்தி முடிக்க, மாநகராட்சி நிர்வாகம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்நிலையில், “தடுப்பூசியின் ஒரு டோசைக் கூட செலுத்தி இருக்காத நபர்களுக்கு, அரசு பஸ்களில் பயணிக்க அனுமதி வழங்கப்படாது,” என, மேயர் நரேஷ் மாஸ்கே நேற்று அறிவித்துள்ளார்.
ம.பி.,யில் 2 பேர் படுகொலை
பாலாகாட்: மத்திய பிரதேசத்தின் பாலாகாட் மாவட்டத்தில் நக்சலைட்டு களின் தாக்குதல் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன. இந்நிலையில் தங்களைப் பற்றி போலீசாரிடம் தகவல் அளித்து வந்ததாக சந்தேகித்து, மாலிகேடி கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் மற்றும் ஜக்தீஷ் யாதவ் என்ற இரண்டு பேரை, நக்சலைட்டுகள் சுட்டுக்கொன்றனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அரசியல் கட்சிக்கு அபராதம்
புதுடில்லி: பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் களமிறங்கும் லோக் இன்சாப் கட்சிக்கு, தபால் பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது. இதையடுத்து, இந்த சின்னத்தை மாற்றி டிராக்டர் சின்னத்தை வழங்கக்கோரி, டில்லி உயர் நீதிமன்றத்தில் அக்கட்சி முறையிட்டது. இந்த மனுவை நேற்று விசாரித்த உயர் நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்ததோடு, அக்கட்சிக்கு, 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது.
104 வயது மூதாட்டி அசத்தல்
கோட்டயம்: கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த குட்டியம்மா என்ற, 104 வயதான மூதாட்டி, மாநில அரசால் நடத்தப்படும் மாநில எழுத்தறிவு தேர்வை எழுதி உள்ளார். நான்காம் வகுப்புக்கு இணையான இந்த தேர்வில், 100 மதிப்பெண்களுக்கு 89 மதிப்பெண்கள் பெற்று, குட்டியம்மா அசத்தி உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X