பொது செய்தி

இந்தியா

பெட்ரோல், டீசல் மீதான வரி 25 மாநிலங்களில் குறைப்பு

Updated : நவ 15, 2021 | Added : நவ 13, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி:பெட்ரோல், டீசல் மீதான 'வாட்' வரியை 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் குறைத்துள்ளன. இவற்றில் பெரும்பாலான மாநிலங்களில் பா.ஜ., மற்றும் கூட்டணி ஆட்சி நடக்கிறது.பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு சமீபத்தில் குறைத்தது. இதையடுத்து, 1 லிட்டர் பெட்ரோலுக்கு 5 ரூபாய்; டீசலுக்கு 10 ரூபாய் குறைந்தது. மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் மீதான 'வாட்' வரியை
 பெட்ரோல், டீசல் , வரி 25 மாநிலங்கள், குறைப்பு

புதுடில்லி:பெட்ரோல், டீசல் மீதான 'வாட்' வரியை 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் குறைத்துள்ளன. இவற்றில் பெரும்பாலான மாநிலங்களில் பா.ஜ., மற்றும் கூட்டணி ஆட்சி நடக்கிறது.
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு சமீபத்தில் குறைத்தது. இதையடுத்து, 1 லிட்டர் பெட்ரோலுக்கு 5 ரூபாய்; டீசலுக்கு 10 ரூபாய் குறைந்தது. மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் மீதான 'வாட்' வரியை குறைக்க வேண்டும் என, மத்திய அரசு வலியுறுத்தியது.
இந்நிலையில்,பெட்ரோலிய துறை வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: மத்திய அரசின் அறிவிப்பிற்குப் பின், 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்துள்ளன.

தமிழகம், மஹாராஷ்டிரா, டில்லி தலைநகர் பிராந்தியம், மேற்கு வங்கம், தெலுங்கானா, ஆந்திரா, கேரளா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை இன்னும் குறைக்கவில்லை. யூனியன் பிரதேசமான லட்சத்தீவு, கேரளாவில் இருந்து வாட் வரி செலுத்தி பெட்ரோல், டீசலை கொள்முதல் செய்கிறது. யூனியன் பிரதேசத்தில் பெட்ரோல், டீசலுக்கு வரியில்லை.

பஞ்சாப் அரசு வாட் வரியை குறைத்த பின், 1 லிட்டர் பெட்ரோல் விலை, 16.02 ரூபாய் குறைந்துள்ளது. இது, லடாக்கில் 13.43 ரூபாய்; கர்நாடகாவில் 13.35 ரூபாய் என்ற அளவிற்கு குறைந்துள்ளது.கர்நாடகாவில் 19.49 ரூபாய்; புதுச்சேரியில் 19.08 ரூபாய் குறைந்துள்ளது. அந்தமான் மற்றும் நிகோபாரில், ௧ லிட்டர் பெட்ரோல் 82.96 ரூபாய்; டீசல் 77.13 ரூபாய் என்ற அளவில் மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
14-நவ-202117:22:22 IST Report Abuse
DVRR இப்போது புது வரித்துறை டாஸ்மாக்கினாட்டில் ஆரம்பித்திருக்கின்றது உற்று நோக்குங்கள். முதல்வர் முக வரித்துறை : முதல்வர் முகவரி துறையின் சிறப்பு அலுவலராக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப் பட்டுள்ளார். அப்போ முதல்வரின் முகத்தை பார்த்தால் அவர்கள் வரி செலுத்தவேண்டும் அப்படித்தானே?????
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
14-நவ-202117:18:31 IST Report Abuse
DVRR தமிழகம், மஹாராஷ்டிரா, டில்லி தலைநகர் பிராந்தியம், மேற்கு வங்கம், தெலுங்கானா, ஆந்திரா, கேரளா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ராஜஸ்தான் - இவைகள் மக்கள் எதிர்ப்பு மாநிலமாக உடனே அறிவிக்கப்படவேண்டும்
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
14-நவ-202109:01:33 IST Report Abuse
Kasimani Baskaran மற்ற செய்திகளில் அந்தந்த மாநிலங்களில் நடக்கும் ஆட்சியை போடுவது போல தமிழகத்தில் திமுக தலைமையில் மதசார்பற்ற கூட்டணி ஆட்சியில் இருக்கிறது என்று போட்டு அவர்களின் லீலைகளில் கூடுதலாக பெட்ரோல் கொள்ளை மற்றும் அவர்கள் எரிபொருளை ஜிஎஸ்டிக்குள் கொண்டு போகும் முயற்சிக்கு போடும் முட்டுக்கட்டை பற்றியும் போட்டிருக்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X