சட்டசபை தேர்தல் நடக்கும் மாநிலங்களில் குட்டி கட்சிகளால் பா.ஜ.,- காங்.,கிற்கு நெருக்கடி| Dinamalar

சட்டசபை தேர்தல் நடக்கும் மாநிலங்களில் குட்டி கட்சிகளால் பா.ஜ.,- காங்.,கிற்கு நெருக்கடி

Updated : நவ 15, 2021 | Added : நவ 13, 2021 | கருத்துகள் (3)
Share
சட்டசபை தேர்தலை விரைவில் சந்திக்க உள்ள உத்தர பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில், தேசிய கட்சிகளான பா.ஜ., மற்றும் காங்கிரசுக்கு பெரும் சவால்கள் காத்திருக்கின்றன. புதிய கட்சிகளின் போட்டியை எதிர்கொள்வதுடன், குட்டி கட்சிகளை ஒருங்கிணைப்பதில் இவற்றுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநில சட்டசபைகளுக்கு,
சட்டசபை தேர்தல் , மாநிலங்கள்,  குட்டி கட்சிகள், பா.ஜ.,- காங்.,கிற்கு நெருக்கடி

சட்டசபை தேர்தலை விரைவில் சந்திக்க உள்ள உத்தர பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில், தேசிய கட்சிகளான பா.ஜ., மற்றும் காங்கிரசுக்கு பெரும் சவால்கள் காத்திருக்கின்றன. புதிய கட்சிகளின் போட்டியை எதிர்கொள்வதுடன், குட்டி கட்சிகளை ஒருங்கிணைப்பதில் இவற்றுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநில சட்டசபைகளுக்கு, அடுத்தாண்டு துவக்கத்தில் தேர்தல் நடக்க உள்ளது. இதில், பஞ்சாபில் மட்டும் காங்கிரஸ் அரசு அமைந்துள்ளது. மற்ற நான்கிலும் பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி அரசு அமைந்துள்ளது.வரும் சட்டசபை தேர்தல் ஆளும் மற்றும் எதிர்க்கட்சியாக உள்ள பா.ஜ., மற்றும் காங்கிரசுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும். பல புதிய கட்சி கள் இந்த மாநிலங்களில் போட்டியிடுகின்றன. மேலும், பிராந்திய கட்சிகளுடனான கூட்டணியை உறுதி செய்ய வேண்டிய நெருக்கடியில் இந்த இரு கட்சிகளும் உள்ளன.அடுத்து வரும் மாதங்களில் மேற்கொள்ளும் பிரசார உத்திகள், கூட்டணி அமைப்பது ஆகியவை, வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தற்போதைய நிலையில் இந்த ஐந்து மாநிலங்களில் உள்ள அரசியல்நிலவரம்:
கோவாசுற்றுலாவுக்கு புகழ்பெற்ற மிகச் சிறிய மாநிலமான கோவா, பல அரசியல் திருப்பங்களை கொண்டது. வரும் சட்ட சபை தேர்தல், மாநில அரசியலில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும். பல ஆண்டுகளாக பா.ஜ., மற்றும் காங்கிரஸ் இங்கு வென்று வந்தன. மொத்தம் 40 தொகுதிகள் உள்ள சட்டசபைக்கு நடக்கும் தேர்தலில், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி மற்றும் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்., கட்சிகளும் போட்டியிட உள்ளன.
இதைத் தவிர தேசியவாத காங்., சிவசேனா, கோவா பார்வர்டு கட்சி, மஹாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி போன்ற பிராந்திய கட்சிகளும் போட்டியிட உள்ளன.
அதனால், ஆளும் பா.ஜ.,வுக்கு பெரும் சவால் காத்திருக்கிறது.


மணிப்பூர்வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் பா.ஜ.,வுக்கும், காங்கிரசுக்கும் நேரடி போட்டி உள்ளது. 2017ல் நடந்த தேர்தலில், மொத்த முள்ள 60 தொகுதிகளில் 28ல் வென்று காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக இருந்தது. ஆனாலும் நாகா மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி, லோக் ஜனசக்தி போன்ற கட்சிகளுடன் இணைந்து, 21 தொகுதிகளில் வென்ற பா.ஜ., ஆட்சி அமைத்தது. சமீபத்திய கருத்துக் கணிப்புகள் பா.ஜ.,வுக்கு சாதகமாக உள்ளன.


பஞ்சாப்பா.ஜ., - அகாலி தளம் இடையேயான கூட்டணி முறிந்த நிலையில், சில மாதங்களுக்கு முன் வரை பஞ்சாபை காங்கிரஸ் தக்க வைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அக்கட்சியில் அடுத்தடுத்து நடந்து வரும் அரசியல் மாற்றங்களில் நிலைமை தலைகீழாகியுள்ளது. கோஷ்டி மோதல் பிரச்னையில் அமரீந்தர் சிங் முதல்வர் பதவியை இழந்தார். நவ்ஜோத் சிங் சித்து, கட்சியின் மாநிலத் தலைவரானார். பெரிதும் அறியப்படாத சரண்ஜித் சிங் சன்னி முதல்வரானார். தற்போது சித்து, சன்னி இடையே மோதல் உள்ளது.தனிக்கட்சி துவக்கியுள்ள அமரீந்தர் சிங், பா.ஜ.,வுடன் கூட்டணி சேருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. இதற்கிடையே ஆம் ஆத்மி கட்சியும் வலுவடைந்து வருகிறது. அதனால் ஆளும் காங்கிரஸ் தேறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.


உத்தரகண்ட்மொத்தம் 70 தொகுதிகள் உள்ள உத்தரகண்டில் 60ல் வெற்றி பெற வேண்டும் என, பா.ஜ., இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால், ஆளும் பா.ஜ.,வுக்கு எதிராக பல அம்சங்கள் உள்ளதால், இந்த இலக்கை எட்டுவது சாத்தியமில்லை என்பதே கள நிலவரம். அண்டை மாநிலமான உத்தர பிரதேசத்தில் விவசாயிகள் நடத்தி வரும் வேளாண் சட்டத்துக்கு எதிரான போராட்டம், லக்கிம்பூரில் நடந்த வன்முறை ஆகியவற்றால், மாநிலத்தில் உள்ள சீக்கியர்கள் பா.ஜ.,வுக்கு எதிராக உள்ளனர்.கிரிக்கெட்டில் மற்றொரு அணி தோற்றால், நமக்கு அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கலாம். அதுபோல, காங்கிரஸ் மேற்கொள்ளும் பிரசாரமே, பா.ஜ.,வின் வெற்றியை
நிர்ணயிக்கும் நிலை உத்தரகண்டில் உள்ளது.


உத்தர பிரதேசம்கடந்த 2017ல் நடந்த தேர்தலில், பா.ஜ., மிகப் பெரும் சாதனையை படைத்தது. மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 320ல் வென்றது. ஆனால், இந்த முறை வெற்றி அவ்வளவு சுலபமாக இருக்காது என்பது மட்டும் நிச்சயம்.அடுத்து நடக்க உள்ள துணை ஜனாதிபதி தேர்தல், ஜனாதிபதி தேர்தல், 2024 லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வின் வெற்றிக்கு அடித்தளமாக அமைய உள்ளதால், உத்தர பிரதேச சட்டசபை தேர்தலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் ஏற்கனவே தயாராகிவிட்டனர்.

முதல்வர் யோகி ஆதித்ய நாத்தும் பல மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம், வரும் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். காங்கிரஸ் தற்காலிக தலைவர் சோனியாவின் மகள் பிரியங்காவின் தலைமையில், காங்கிரஸ் தேர்தலை சந்திக்க உள்ளது. முக்கிய பிராந்திய கட்சி களான சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் தனித்து போட்டியிட உள்ளன. பலமுனை போட்டி, பா.ஜ.,வுக்கு சாதகமாக இருக்கலாம். இருப்பினும், அடுத்த கட்ட அரசியல் நிகழ்வுகள், நகர்வுகளே அதை உறுதி செய்யும்.- நமது சிறப்பு நிருபர் -

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X