சந்திக்க மறுக்கும் அமித் ஷா

Updated : நவ 14, 2021 | Added : நவ 13, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
தி.மு.க.,வின் மூத்த எம்.பி.,க்கள் சிலர் சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க முயற்சி செய்தனர். ஆனால், அமித் ஷா நேரம் ஒதுக்கவில்லை. நிதின் கட்கரி உட்பட மூத்த அமைச்சர்களை இந்த தி.மு.க., - எம்.பி.,க்கள் சந்தித்து அமித் ஷாவிடம் பேசி, தங்களுக்கு நேரம் ஒதுக்கித் தரும்படி வலியுறுத்தினர். கட்கரி உடனே அமித் ஷாவை தொடர்பு கொண்டு இது குறித்து பேசியுள்ளார். ஆனால் பதில் எதுவும்
 டில்லி 'உஷ்ஷ்ஷ்!'

தி.மு.க.,வின் மூத்த எம்.பி.,க்கள் சிலர் சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க முயற்சி செய்தனர். ஆனால், அமித் ஷா நேரம் ஒதுக்கவில்லை. நிதின் கட்கரி உட்பட மூத்த அமைச்சர்களை இந்த தி.மு.க., - எம்.பி.,க்கள் சந்தித்து அமித் ஷாவிடம் பேசி, தங்களுக்கு நேரம் ஒதுக்கித் தரும்படி வலியுறுத்தினர். கட்கரி உடனே அமித் ஷாவை தொடர்பு கொண்டு இது குறித்து பேசியுள்ளார். ஆனால் பதில் எதுவும் சொல்லவில்லை அமித் ஷா.
சொந்த விஷயங்கள் தொடர்பாக யாரையும் சந்திப்பதை அமித் ஷா விரும்புவதில்லை. தவிர இப்படி தனிப்பட்ட நபர் பிரச்னைகளை தீர்க்க, அரசியல்வாதிகள் சந்திக்க நேரம் கேட்டால் ஒதுக்குவதில்லையாம். இதை ஒரு கொள்கையாகவே வைத்து உள்ளார் அமித் ஷா. தி.மு.க., - எம்.பி.,க்கள் கட்சி மற்றும் குடும்ப பிரச்னை காரணமாக அமித் ஷாவை சந்திக்க நேரம் கேட்டுள்ளனர் என்பது அவருக்கு தெரியும்; அதனால்தான் சந்திக்கவில்லை என்கின்றனர் பா.ஜ.,வினர்.


ரகசிய அறிக்கை

தேசிய புலனாய்வு அமைப்பு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு கொடுத்துள்ள அறிக்கையில், 'தமிழகத்தில் பயங்கரவாதம் தலை துாக்க வாய்ப்புள்ளது. ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு தமிழகத்தில் ஊடுருவத் துவங்கி விட்டது' என சொல்லிஉள்ளதாம். மேலும், தமிழகம் தொடர்பாக மத்திய உள்துறை செயலரும் ரகசிய அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார். அதில், கொலை வழக்கில் சிக்கியுள்ள தி.மு.க., - எம்.பி.,க்கள் மற்றும் விடுதலைப் புலி பற்றிய சில முக்கிய விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.


பிரச்னையாகும் கையெழுத்து

சமீப காலமாக ஒரு ஹிந்தி கையெழுத்து தி.மு.க.,வினரை பெரிதும் பாதித்துள்ளது. இந்த கையெழுத்திற்கு சொந்தக்காரர் தமிழக கவர்னர் ரவி. தமிழக அரசுக்கு அவர் அனுப்பும் கடிதங்களில் ஹிந்தியில் தான் கையெழுத்திடுகிறார். ஹிந்தியை எதிர்த்து அரசியல் நடத்தி வருவதுடன், முந்தைய கவர்னர் குறித்தும் விமர்சனம் செய்து வந்த தி.மு.க.,வினர், இப்போது என்ன செய்வது என குழப்பத்தில் உள்ளனர்.
'கடந்த 40 ஆண்டுகளாக, அவர் ஐ.பி.எஸ்., அதிகாரியாக இருக்கும் போதிலிருந்தே, ஹிந்தியில் தான் கையெழுத்திட்டு வருகிறார். 'தி.மு.க.,விற்காக தன் கையெழுத்தை அவர் மாற்ற முடியுமா' என, கேள்வி எழுப்புகின்றனர், கவர்னருக்கு நெருக்கமான அதிகாரிகள்.


மண்ணை கவ்வும் காங்கிரஸ்?



சமீபத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்., மூத்த தலைவருமான சல்மான் குர்ஷித் ஒரு புத்தகத்தை வெளியிட்டார். இந்த புத்தகத்தின் முதல் பிரதியை பெற்றுக் கொண்டவர் நம்ம ஊர் சிதம்பரம்.இந்த புத்தகத்தில் ஹிந்துத்வாவை பயங்கரவாதத்துடன் ஒப்பிட்டுள்ளார் சல்மான் குர்ஷித். போகோ ஹாராம் என நைஜீரியாவில் ஒரு பயங்கரவாத அமைப்பு உள்ளது. இது அங்குள்ள முஸ்லிம் அல்லாத பெண்களை கொடுமைப்படுத்தி வருகிறது. இந்த அமைப்பும், ஹிந்துத்வாவும் ஒன்றுதான் என கூறியுள்ளார் குர்ஷித்.

மேலும், ஹிந்துத்வாவை, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடனும் ஒப்பிட்டுஉள்ளார். காங்கிரஸ் எம்.பி., ராகுலும் இதை ஆதரித்து வீடியோ வெளியிட்டார். இது காங்கிரஸ்காரர்களை பெரிதும் கலங்கடித்துவிட்டது.'உ.பி.,யில் சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஹிந்துக்களுக்கு எதிராக கருத்து தெரிவித்தால், அவர்களது ஓட்டு எப்படி நமக்கு கிடைக்கும்; மண்ணை கவ்வ வேண்டியது தான்' என புலம்புகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
20-நவ-202114:45:04 IST Report Abuse
மலரின் மகள் அமைதியாக இருக்கும் சிலரை சீண்டி கொண்டே இருந்தால் அவர்கள் ஒரு கட்டத்தில் எதிர்ப்பார்கள் என்று அதை தான் சிலர் எதிர்பார்ப்பார்கள். சிசுபாலன் கதை அறியாதவர்கள் அவர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X