கைதான விவசாயிகளுக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு

Added : நவ 13, 2021
Share
Advertisement
சண்டிகர்:வேளாண் சட்டங்களை எதிர்த்து, டில்லியில் டிராக்டர் பேரணி நடத்தி கைதான, 83 விவசாயிகளுக்கு, தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, பஞ்சாப் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப் உள்ளிட்ட சில மாநில விவசாயிகள் டில்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.ஜன., 26ல் குடியரசு தினத்தன்று விவசாயிகள் டில்லியில் டிராக்டர் பேரணி நடத்தினர்.

சண்டிகர்:வேளாண் சட்டங்களை எதிர்த்து, டில்லியில் டிராக்டர் பேரணி நடத்தி கைதான, 83 விவசாயிகளுக்கு, தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, பஞ்சாப் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப் உள்ளிட்ட சில மாநில விவசாயிகள் டில்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.ஜன., 26ல் குடியரசு தினத்தன்று விவசாயிகள் டில்லியில் டிராக்டர் பேரணி நடத்தினர். இதில் வன்முறை வெடித்தது. இது தொடர்பாக 83 விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
'விவசாயிகளுக்கு அளித்து வரும் ஆதரவை உறுதி செய்யும் வகையில், கைது செய்யப் பட்ட 83 விவசாயிகள் குடும்பத்துக்கு, தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்' என, பஞ்சாப் முதல்வரான, காங்கிரசைச் சேர்ந்த சரண்ஜித் சிங் சன்னி தெரிவித்துள்ளார். பஞ்சாபில், அடுத்த ஆண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்கஉள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X