பொது செய்தி

இந்தியா

பிரதமர் பங்கேற்கும் பேரணிக்கு வரும் வாகனங்களுக்கு 'டோல்' கிடையாது

Updated : நவ 13, 2021 | Added : நவ 13, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
போபால் : மத்திய பிரதேசத்தின் போபாலில் நாளை (நவ.14) நடக்க உள்ள பழங்குடியினர் மாநாடு மற்றும் பேரணிக்கு வரும் வாகனங்களுக்கு, 'டோல்' எனப்படும் சுங்கக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளித்து, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.ம.பி.,யில் முதல்வர் சிவ்ராஜ் சிவ் சவுகான் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. பழங்குடியினத் தலைவரான பிர்ஸா முண்டாவின் பிறந்த நாள் மற்றும் நாட்டின்
 பிரதமர் , பேரணி,வாகனங்கள்,  டோல் , கிடையாது

போபால் : மத்திய பிரதேசத்தின் போபாலில் நாளை (நவ.14) நடக்க உள்ள பழங்குடியினர் மாநாடு மற்றும் பேரணிக்கு வரும் வாகனங்களுக்கு, 'டோல்'
எனப்படும் சுங்கக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளித்து, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

ம.பி.,யில் முதல்வர் சிவ்ராஜ் சிவ் சவுகான் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. பழங்குடியினத் தலைவரான பிர்ஸா முண்டாவின் பிறந்த நாள் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு பழங்குடியினரின் பங்களிப்பை கவுரவிக்கும் வகையில், நவம்பர் 15ம் தேதியை பழங்குடியினர் கவுரவ தினமாக கொண்டாட மத்திய அரசு முடிவு செய்தது.


latest tamil news




இதன்படி, போபாலில் நாளை நாளை (நவ.14) நடக்கும் பிரமாண்ட பேரணி மற்றும் மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதற்கான ஏற்பாடுகள் குறித்து முதல்வர் சவுகான், அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
பேரணியில் பங்கேற்க வரும் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணத்தில் விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.மேலும், வாகனங்கள் பழுதடைந்தால் உடனே சரி செய்வதற்கான வசதிகள், குடிநீர், உணவு வசதிகளை உறுதிபடுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.
இந்தப் பேரணி மற்றும் மாநாட்டில், 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramaswami Sampath - mumbai,இந்தியா
14-நவ-202113:01:34 IST Report Abuse
Ramaswami Sampath 2014 இல் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டோலையே ஒழிப்போம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த அரசாங்கம்.
Rate this:
Cancel
Ramaswami Sampath - mumbai,இந்தியா
14-நவ-202110:24:57 IST Report Abuse
Ramaswami Sampath நாட்டு மக்களுக்கு பெரிய நன்மை.வறுமை ஒழிந்து மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.
Rate this:
Cancel
abdulrahim - ஜுபைல்,சவுதி அரேபியா
14-நவ-202110:05:24 IST Report Abuse
abdulrahim உபதேசம் எல்லாம் ஊருக்குத்தான் போல.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X