பொது செய்தி

தமிழ்நாடு

சுவர் ஈரமாக இருந்தால் 'சுவிட்சை' தொடாதீங்க!

Added : நவ 13, 2021
Share
Advertisement
சென்னை:'தண்ணீர் புகுந்த வீடுகளுக்குள், சுவர்கள் ஈரமாக இருந்தால், மின் சாதனங்களை இயக்கும் சுவிட்ச்களை தொட வேண்டாம்' என, பொது மக்களுக்கு மின் வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.இதுகுறித்து, தமிழக மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:கனமழை காரணமாக, தாழ்வான பகுதிகளில் இருந்த வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதனால், மின் விபத்து ஏற்படாமல் இருக்க, பாதுகாப்பு கருதி அந்த

சென்னை:'தண்ணீர் புகுந்த வீடுகளுக்குள், சுவர்கள் ஈரமாக இருந்தால், மின் சாதனங்களை இயக்கும் சுவிட்ச்களை தொட வேண்டாம்' என, பொது மக்களுக்கு மின் வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து, தமிழக மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:கனமழை காரணமாக, தாழ்வான பகுதிகளில் இருந்த வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதனால், மின் விபத்து ஏற்படாமல் இருக்க, பாதுகாப்பு கருதி அந்த வீடுகளுக்கு மின் வினியோகம் நிறுத்தப்பட்டது. மழை நீர் வடிவதற்கு ஏற்ப மீண்டும் மின்சாரம் வழங்கப்படுகிறது.

முழங்கால் அளவுக்கு தண்ணீர் நிற்கும் வீடுகளின் உரிமையாளர்கள், மின்சாரம் வழங்குமாறு கட்டாயப்படுத்துகின்றனர். தண்ணீர் வடிந்தால் மட்டுமே, அந்த வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப் படும். இதற்கு, பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.மழையாலும், தண்ணீர் புகுந்ததாலும், பல வீடுகளின் சுவர்களில் ஈரப்பதம் நீடிக்கிறது. அந்த சமயத்தில், 'லைட், டிவி' போன்ற சாதனங்களை இயக்க, 'சுவிட்ச் போர்டை' கைகளால் தொடக்கூடாது.
ஈரம் காய்ந்த பின் தான் தொட வேண்டும்.வீடுகளில் உள்ள மின் ஒயர்களில், தண்ணீர் கசிவு ஏற்பட்டு இருந்தால், உடனே மின் வாரிய ஊழியர்களிடமும், மின்னகம் நுகர்வோர் சேவை மையத்தின், 94987 94987 என்ற மொபைல் போன் எண்ணிலும் தகவல் அளித்தால், சரிசெய்து தர நடவடிக்கை எடுக்கப்படும்.
மின் கம்பம், மின் வினியோக பெட்டி போன்ற சாதனங்களில், ஏதேனும் சேதமடைந்திருந்தால், அவற்றின் அருகில் செல்லாமல், மின்னகத்தில் புகார் அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X