சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிவசங்கர் பாபா அறையை திறந்து ஆய்வு செய்ய முடிவு

Added : நவ 13, 2021
Share
Advertisement
சென்னை:பாலியல் புகார் தொடர்பாக, மேலும் ஒரு போக்சோ வழக்கு, சிவசங்கர் பாபா மீது பதியப்பட்டுள்ளது. சென்னை கேளம்பாக்கம் அருகே சாத்தங்குப்பத்தில் இயங்கி வரும், 'சுசில் ஹரி இண்டர்நேஷனல்' பள்ளியில் படித்த மாணவியர் நான்கு பேர், பள்ளியின் உரிமையாளர் சிவசங்கர் பாபா, 72, பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்தனர். அதனால், அவர் மீது நான்கு போக்சோ வழக்குகள் பதியப்பட்டன; அவரை

சென்னை:பாலியல் புகார் தொடர்பாக, மேலும் ஒரு போக்சோ வழக்கு, சிவசங்கர் பாபா மீது பதியப்பட்டுள்ளது.

சென்னை கேளம்பாக்கம் அருகே சாத்தங்குப்பத்தில் இயங்கி வரும், 'சுசில் ஹரி இண்டர்நேஷனல்' பள்ளியில் படித்த மாணவியர் நான்கு பேர், பள்ளியின் உரிமையாளர் சிவசங்கர் பாபா, 72, பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்தனர். அதனால், அவர் மீது நான்கு போக்சோ வழக்குகள் பதியப்பட்டன; அவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவியர் புகார் அளிக்கலாம்; அவர்கள் குறித்த தகவல் ரகசியம் காக்கப்படும் என, வழக்கை விசாரித்து வரும், சி.பி.சி.ஐ.டி., போலீசார் தெரிவித்தனர்.அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவி ஒருவர், சிவசங்கர் பாபா மீது பாலியல் புகார் அளித்துள்ளார். இந்த புகார் மீதும், அவர் மீது வழக்கு பதியப்பட்டுஉள்ளது.

இதுவரை, ஐந்து போக்சோ, ஒரு வன்கொடுமை என, ஆறு வழக்குகள் பாபா மீது பதியப்பட்டு உள்ளன.சுசில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளியில் உள்ள சிவசங்கர் பாபாவின் ரகசியை அறையை திறந்து, ஆய்வு செய்யவும் சி.பி.சி.ஐ.டி., போலீசார் திட்டமிட்டுஉள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X