கோர்ட் செய்தி

தமிழ்நாடு

முத்திரைத்தாள் விற்பனையாளரிடம் கட்டணம் வசூலிக்க தடை

Added : நவ 13, 2021
Share
Advertisement
சென்னை:'முத்திரைத்தாள் விற்பனையாளர்களிடம், பணம் கையாளுவதற்கான கட்டணம் வசூலிக்க, பாரத ஸ்டேட் வங்கிக்கு அதிகாரம் இல்லை' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. வங்கிக்கு வருபவர்களை கவுரவமாக நடத்தவும் அறிவுறுத்தி உள்ளது.பணம்முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் தாக்கல் செய்த மனுக்களில் கூறியிருப்பதாவது:அரசின் வங்கி கணக்கில், கருவூல ரசீது வாயிலாக

சென்னை:'முத்திரைத்தாள் விற்பனையாளர்களிடம், பணம் கையாளுவதற்கான கட்டணம் வசூலிக்க, பாரத ஸ்டேட் வங்கிக்கு அதிகாரம் இல்லை' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
வங்கிக்கு வருபவர்களை கவுரவமாக நடத்தவும் அறிவுறுத்தி உள்ளது.பணம்முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் தாக்கல் செய்த மனுக்களில் கூறியிருப்பதாவது:அரசின் வங்கி கணக்கில், கருவூல ரசீது வாயிலாக முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் டிபாசிட் செய்கின்றனர். முத்திரைத்தாள் வாங்குவதற்காக இந்தப் பணம் டிபாசிட் செய்யப்படுகிறது.

பணம் கையாள்வதற்கான கட்டணம் என 150 ரூபாய் முதல் 200 வரை செலுத்த வேண்டியது உள்ளது. இந்தக் கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும்.இவ்வாறு மனுக்களில் கூறப்பட்டு உள்ளது.மனுக்களை விசாரித்த, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு:

தவறுதலாக கட்டணம் வசூலிப்பதாகவும், கட்டணம் வசூலிக்க வங்கிக்கு அதிகாரம் இல்லை என்றும், அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரசு கணக்கில் டிபாசிட் செலுத்துவதற்கு, முத்திரைத்தாள் விற்பனையாளர்களிடம் கட்டணம் வசூலிக்க அனுமதி இல்லை.

கட்டணம் வசூலிக்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது என்பதை, பாரத ஸ்டேட் வங்கியால் நிரூபிக்க முடியவில்லை. ரிசர்வ் வங்கியிடம் இருந்து, எந்தவித உத்தரவும் இல்லாத நிலையில், முத்திரைத்தாள் விற்பனை யாளர்களிடம் கட்டணம் வசூலிக்க வங்கிக்கு உரிமை இல்லை.பரிவர்த்தனையை மேற்கொள்ள, வேறு வங்கியை மனுதாரர்கள் அணுகி கொள்ளலாம் என, பாரத ஸ்டேட் வங்கி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதை, பொறுப்பற்றதாக கருத வேண்டியுள்ளது. பின், அதிகாரிகள் தரப்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.


சம்பளம்


வாடிக்கையாளர்களிடமும், வங்கியை அணுகும் எவரிடமும், நல்ல முறையில் நடந்து கொள்ளும்படி, அதிகாரிகளுக்கு பொது மேலாளர் அறிவுறுத்த வேண்டும்.வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் பரிவர்த்தனையால் தான், வங்கி ஊழியர்களுக்கு சம்பளம் கிடைக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதனால், வங்கியை அணுகுபவர்களை கவுரவத்துடன் நடத்த வேண்டும்.

தமிழக அரசின் கருவூல கமிஷனர் அனுப்பிய கடிதத்துக்கு பதில் அளிக்க வேண்டியதில்லை என்றும், வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரசு அதிகாரிகள் அனுப்பும் கடிதத்துக்கு, வங்கி தரப்பில் பதில் அளிக்க வேண்டும்; புறக்கணிக்கக் கூடாது.

எனவே, பணம் கையாள்வதற்கு முத்திரைத்தாள் விற்பனையாளர்களிடம், கட்டணம் வசூலிக்கக் கூடாது என பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகத்துக்கு உத்தரவிடப்படுகிறது. கட்டணம் வசூலிப்பதற்கு வங்கிக்கு அதிகாரம் இல்லை.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X