பூதத்தாழ்வார் உற்சவம் நிறைவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பூதத்தாழ்வார் உற்சவம் நிறைவு

Added : நவ 13, 2021
Share
மாமல்லபுரம் : மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில், பூதத்தாழ்வார் அவதார உற்சவம் நிறைவு பெற்றது.வைணவ 12 ஆழ்வார்களில் ஒருவர் பூதத்தாழ்வார். மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில், இவருக்கு தனி சன்னிதி உண்டு. ஐப்பசி அவிட்ட நட்சத்திர நாளில், இவர் அவதரித்த நிலையில், அவதார உற்சவம், கோவிலில், நவ., 3ம் தேதி துவங்கி, நேற்று முன்தினம் வரை நடந்தது. இதை முன்னிட்டு அவருக்கு, தினமும்

மாமல்லபுரம் : மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில், பூதத்தாழ்வார் அவதார உற்சவம் நிறைவு பெற்றது.

வைணவ 12 ஆழ்வார்களில் ஒருவர் பூதத்தாழ்வார். மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில், இவருக்கு தனி சன்னிதி உண்டு. ஐப்பசி அவிட்ட நட்சத்திர நாளில், இவர் அவதரித்த நிலையில், அவதார உற்சவம், கோவிலில், நவ., 3ம் தேதி துவங்கி, நேற்று முன்தினம் வரை நடந்தது. இதை முன்னிட்டு அவருக்கு, தினமும் திருமஞ்சனம், நாலாயிர திவ்யபிரபந்தம், திருவாய்மொழி சாற்றுமுறை என, சேவையாற்றப்பட்டது.அவதார நாளான இறுதிநாளில், பூதத்தாழ்வார் மூலவர் திருமஞ்சனம் நடத்தி, பெருமாள், நிலமங்கை தாயார், ஆண்டாள் உள்ளிட்ட சுவாமியருடன் மங்களாசாசனம் மற்றும் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

இரவு, திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள், காஞ்சிபுரம் தேவராஜசுவாமி, பாண்டவ துாத பெருமாள், மாமல்லபுரம் ஆதிவராக பெருமாள், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் ஆகிய கோவில்களின் பரிவட்ட மரியாதை செலுத்தி, திருப்பாவை, திருவாய்மொழி சேவையாற்றப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X