மாஜி கமிஷனர் பரம்பீ்ர்சிங் தலைமறைவு: மறைவு குற்றவாளியாக அறிவிப்பு

Updated : நவ 13, 2021 | Added : நவ 13, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
மும்பை: மிரட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.தெற்கு மும்பையில் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டருகே கடந்த பிப்ரவரியில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட கார் நின்றிருந்த வழக்கினை என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு ஏஜென்சி போலீசார் விசாரித்தனர். அப்போது மும்பை
 மாஜி கமிஷனர் பரம்பீ்ர்சிங்Mumbai Police moves court to have ex-commissioner Param Bir Singh declared a 'proclaimed offender'

மும்பை: மிரட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

தெற்கு மும்பையில் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டருகே கடந்த பிப்ரவரியில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட கார் நின்றிருந்த வழக்கினை என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு ஏஜென்சி போலீசார் விசாரித்தனர். அப்போது மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த பரம்பீர் சிங் மார்ச் மாதம் திடீரென பணியிட மாற்றம் செய்து மாநில அரசு உத்தரவிட்டது.


latest tamil news



இந்த வழக்கில் பரம்பீர்சிங் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் அனுப்பினார். அதில் உள்துறை அமைச்சராக இருந்த அனில் தேஷ் முக் மாதம் ரூ.100 கோடி வரை வசூலித்து தர வேண்டும் என உதவி இன்ஸ்பெக்டர் சச்சின் வாஸே மூலம் தன்னை கட்டாயப்படுத்தியதாகவும், இதையடுத்து முகேஷ் அம்பானியிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுவிக்கவே வெடிபொருள் கார் சதி திட்டம் தீ்ட்டியதாக கடிதத்தில் கூறியுள்ளார்.

இந்நிலையில் மிரட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கில் பரம்பீர் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இவர் மீதான வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், தலைமறைவானார்.

பரம்பீ்ர் சிங்கிற்கு மும்பை குற்றப்பிரிவு போலீஸ் பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை. இதுவரை மூன்று முறை ஜாமினில் வெளிவர முடியாக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து அவர் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Murugan - Bandar Seri Begawan,புருனே
14-நவ-202105:02:49 IST Report Abuse
Murugan இது ஒரு உதாரணம் தான்.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
14-நவ-202104:07:23 IST Report Abuse
J.V. Iyer யார் இவரை பணம் வசூலித்து தர வேண்டும் என கட்டாயப்படுத்தினாரோ அவரே இவரை போட்டு தள்ளியிருப்பார். கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X