தமிழ்நாடு

1,200 ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மை திட்டம் பல்லவ மன்னனால் உருவாக்கப்பட்ட உத்திரமேரூர் ஏரி

Added : நவ 13, 2021
Share
Advertisement
உத்திரமேரூரை ஆட்சி செய்த நந்திவர்ம பல்லவ மன்னன் 1,200 ஆண்டு களுக்கு முன்னரே நீர் மேலாண்மை திட்டத்தின்படி உத்திரமேரூர் ஏரியை உருவாக்கியுள்ளார் என, உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மைய தலைவர் கொற்றவை ஆதன் தெரிவித்துள்ளார்.காஞ்சிபுரம் மாவட்டத்தின் இரண்டாவது மிகப்பெரிய ஏரி. 18 மதகு; 5,636 ஏக்கர் பாசன பரப்பு; 20 அடி ஆழம் உடைய இந்த ஏரி, 18 கிராமங்களில் விவசாயத்திற்கு பயன்படுகிறது.இந்த
 1,200 ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மை திட்டம் பல்லவ மன்னனால் உருவாக்கப்பட்ட உத்திரமேரூர் ஏரிஉத்திரமேரூரை ஆட்சி செய்த நந்திவர்ம பல்லவ மன்னன் 1,200 ஆண்டு களுக்கு முன்னரே நீர் மேலாண்மை திட்டத்தின்படி உத்திரமேரூர் ஏரியை உருவாக்கியுள்ளார் என, உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மைய தலைவர் கொற்றவை ஆதன் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் இரண்டாவது மிகப்பெரிய ஏரி. 18 மதகு; 5,636 ஏக்கர் பாசன பரப்பு; 20 அடி ஆழம் உடைய இந்த ஏரி, 18 கிராமங்களில் விவசாயத்திற்கு பயன்படுகிறது.இந்த ஏரி, 1,200 ஆண்டுகளுக்கு முன், நீர் மேலாண்மை திட்டத்தின்படி உருவாக்கப்பட்டுள்ளது என, உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மைய தலைவர் கொற்றவை ஆதன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது:பண்டைய காலத்தில் மன்னர்கள் புதிய ஊர்களை அமைக்கும்போது மக்களுக்கும், வேளாண்மைக்கும் உதவியாக ஏரி, குளம், குட்டை வாய்க்கால் முதலிய நீர் நிலைகளை அமைத்தனர். இவை அந்தந்த அரசர்கள் பெயரால் அழைக்கப்பட்டன. அதன்படி நந்திவர்ம பல்லவ மன்னரின் சிறப்பு பெயரான வைரமேகன் என்ற பெயரில், வைரமேகன் தடாகம் என, இந்த ஏரி அழைக்கப்பட்டது. 'தடாகம்' என்றால் நான்கு புறமும் கரை உயர்த்தி அழகாக கட்டப்பட்ட நீர்நிலை என்று பொருள்.

நீர் மேலாண்மைஇந்த ஏரியின் நீர் வரத்திற்காக, 8 கி.மீட்டரில் உள்ள அனுமந்தண்டலம் செய்யாற்றில் தடுப்பணையில் இருந்து, தனி வாய்க்கால் அமைக்கப்பட்டு உள்ளது.செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, இவ்வாய்க்கால் வழியாக பல கிராமங்களை கடந்து திருப்புலிவனம் கிராமத்தில், ஒரு பகுதி நீர் சென்று அந்த ஏரியை நிரப்பி, இறுதியாக உத்திரமேரூர் ஏரியை வந்தடைகிறது.அவ்வாறு வந்தடைந்த நீரானது ஆண்டு முழுதும் விவசாய பாசனத்திற்காக, தேவைக்கேற்ப திறந்துவிட்டு பயன்படுத்தும் வகையில் மதகுகள் அமைக்கப்பட்பட்டுள்ளன.இந்த ஏரிக்கு, 18 மதகுகள் உள்ளன.

பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, உபரி நீரை வெளியேற்ற பெரிய ஏரியில் கலங்கல் எனப்படும், இரண்டு கலங்கல்களும், சிற்றேரியில் ஒரு கலங்கல் என, மூன்று கலங்குகள் உள்ளன.ஏரியின் உபரி நீரானது வாய்க்கால்களில் ஓடி, பல்வேறு கிராமங்களில் உள்ள நீர்நிலைகளை நிரப்பி இறுதியாக, 30 கி.மீ., செங்கல்பட்டு மாவட்டத்தின் பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரியை சென்றடைகிறது.

அனுமந்தண்டலம் செய்யாறு தடுப்பணையில் இருந்து, 40 கி.மீ., தொலைவில் உள்ள மதுராந்தகம் ஏரிக்கு, உத்திரமேரூர் ஏரி வழியாக பல்வேறு கிராம நீர்நிலைகளை சங்கிலித்தொடர் போல் இணைத்து, நீர்நிலைகளை நிரப்பி சேமிக்கும் வகையில், பழந்தமிழரின் நீர் மேலாண்மை உள்ளது.இந்த நீர் மேலாண்மை குறித்த தகவல்கள், 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கிய நுால்களில் இருந்தே நமக்கு தரவுகள் கிடைக்கின்றன.

கலங்கல் என்பது, ஏரி முதலிய பாசன நீர்த்தேக்கங்களில் உடைப்பு எடுக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நீர் செல்லும் வகையில் கற்களால் உறுதியாக கட்டப்பட்டு, தேவைப்படும்போது பலகைகளால் அடைத்துத் திறக்கக் கூடிய அமைப்பு.இந்த ஏரியில் மூன்று கலங்கல் உள்ளன.

இம்மூன்று கலங்களிலும் ஒரே நேரத்தில் ஒரே அளவு உபரிநீர் வெளியேறும் அளவு துல்லியமாக கணக்கிட்டு அற்புதமான தொழில்நுட்பத்துடன் அமைத்துள்ளனர்.அதேபோல் ஏரி நிறைந்தால் அபாய காலங்களில் திறக்கப்படுவதற்கு நிறை மடை பயன்படுத்தப்பட்டது. தொழில்நுட்பம்நிறை மடை என்பது நாளடைவில் நரிமடை என மருவி விட்டது.

எவ்வளவு பெரிய வெள்ளம் வந்தாலும், ஏரியின் கொள்ளளவை தாண்டி நீர் வெளியேற்றும் வகையில் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் கரை உடைப்பும் தடுக்கப்படுகிறது. இத்தகைய சிறந்த தொழில்நுட்பத்துடன் நீர் மேலாண்மை செயல்படுத்தப்பட்டது.

மதகுகளில் பாசனத்திற்காக நீர் வெளியேற்றும்போது, வண்டல் மண்ணும் நீருடன் சேர்ந்து வெளியேறும் வகையில் சிறந்த தொழில்நுட்பத்துடன் மதகுகள் அமைக்கப்பட்டன.இதன் வாயிலாக ஏரி துார்ந்து போகாமலும், துார் வாரும் வேலை இல்லாமலும் ஏரி ஆழமாகவும் இருந்தது. மேலும் வண்டல் மண், நீரில் வெளியேறி வயல் வெளியிக்கு சென்று, அந்த வயலுக்கு உரமாகி விளைச்சலை அதிகப்படுத்தியது. இதனால், களர் நிலங்கள் அதிகமாக இருந்த இப்பகுதி, விளைநிலங்களாக உருவாகின.ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிறந்த அறிவையும், அறிவியலையும் நீர் கணக்கீட்டு முறையையும் தொழில்நுட்பத்தையும் நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்தி உள்ளனர் என்பதை எண்ணினால், ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் உள்ளது.

ஒரு ஏரி என்பது சாதாரண நீர் நிலை தேக்கம் அல்ல; அதற்கு பின்னால் இவ்வளவு சிறந்த அறிவியல் தொழில்நுட்பங்கள் உள்ளது என்பதை இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும்; அந்த நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X