பொது செய்தி

தமிழ்நாடு

கால்நடைக்கு கோமாரி நோய் தடுப்பூசிக்காக 'வெயிட்டிங்'

Added : நவ 13, 2021
Share
Advertisement
திருவள்ளூர் : கோமாரி நோய்த் தொற்றுக்கான, தடுப்பூசி மருந்து பெறப்பட்டவுடன், அனைத்து கால்நடைகளுக்கும் செலுத்தப்படும் என, கலெக்டர் தெரிவித்தார்.3மாவட்டத்தில், கோமாரி நோய்த் தொற்று, திருவள்ளூர் கோட்டம் - திருவள்ளூர், பெரியபாளையம், வடமதுரை; திருத்தணி கோட்டம் - கனகம்மாசத்திரம், திருவாலங்காடு; பொன்னேரி கோட்டம் - திருப்பாலைவனம், ஆரணி, பனப்பாக்கம், பெரும்பேடு, தேவம்பட்டு,

திருவள்ளூர் : கோமாரி நோய்த் தொற்றுக்கான, தடுப்பூசி மருந்து பெறப்பட்டவுடன், அனைத்து கால்நடைகளுக்கும் செலுத்தப்படும் என, கலெக்டர் தெரிவித்தார்.

3மாவட்டத்தில், கோமாரி நோய்த் தொற்று, திருவள்ளூர் கோட்டம் - திருவள்ளூர், பெரியபாளையம், வடமதுரை; திருத்தணி கோட்டம் - கனகம்மாசத்திரம், திருவாலங்காடு; பொன்னேரி கோட்டம் - திருப்பாலைவனம், ஆரணி, பனப்பாக்கம், பெரும்பேடு, தேவம்பட்டு, பகுதிகளில் பரவலாக காணப்படுகிறது.திருவாலங்காடு, கனகம்மாசத்திரம் பகுதிகளில், 5,000 கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

நோய்த் தொற்று தென்படும் கிராமங்களில், கால்நடை மருத்துவக் குழுவினர் வாயிலாக, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.கோமாரி நோய்க்கான தடுப்பூசி மருந்து பெறப்பட்டவுடன், மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடைகளுக்கும், தடுப்பூசி பணி மேற்கொள்ளப்படும். இத்தகவலை, திருவள்ளூர் கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X