பொது செய்தி

இந்தியா

கொரோனா தடுப்பூசி மூன்றாவது டோஸ் :மத்திய அரசு ஆலோசனை

Added : நவ 13, 2021
Share
Advertisement
பெங்களூரு:மக்களுக்கு கொரோனா தடுப்பூசி மூன்றாவது டோஸ் போடுவது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வரும் நிலையில் சுகாதார ஊழியர்கள், டாக்டர்கள் தாங்களாகவே முன் வந்து மூன்றாவது டோஸ் தடுப்பூசி பெறுகின்றனர்.கர்நாடகாவில் இரண்டு டோஸ் தடுப்பூசி பெற்றவர்களுக்கும் கூட, தொற்று ஏற்பட்டு ஐ.சி.யூ.,வில் சிகிச்சை பெறுகின்றனர். உயிரிழப்பு நடந்துள்ளதால் மக்களுக்கு குறிப்பாக

பெங்களூரு:மக்களுக்கு கொரோனா தடுப்பூசி மூன்றாவது டோஸ் போடுவது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வரும் நிலையில் சுகாதார ஊழியர்கள், டாக்டர்கள் தாங்களாகவே முன் வந்து மூன்றாவது டோஸ் தடுப்பூசி பெறுகின்றனர்.

கர்நாடகாவில் இரண்டு டோஸ் தடுப்பூசி பெற்றவர்களுக்கும் கூட, தொற்று ஏற்பட்டு ஐ.சி.யூ.,வில் சிகிச்சை பெறுகின்றனர். உயிரிழப்பு நடந்துள்ளதால் மக்களுக்கு குறிப்பாக டாக்டர்கள், சுகாதார ஊழியர்கள் பீதியில் உள்ளனர்.இரண்டு டோஸ் தடுப்பூசி பெற்றவர்கள், தங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பரிசோதிக்கின்றனர்.

ஒருவேளை நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால், மூன்றாவது டோஸ் பெறுகின்றனர்.இது தொடர்பாக கொரோனா தொழில்நுட்ப கமிட்டி உறுப்பினர் மஞ்சுநாத் கூறியதாவது:கொரோனா பயத்தால் பலரும் மூன்றாவது டோஸ் தடுப்பூசி பெறுகின்றனர். வெறும் அரசு மருத்துவமனை மட்டுமின்றி, தனியார் மருத்துவமனை டாக்டர்களும் கூட மூன்றாவது டோஸ் பெறுகின்றனர்.

முதல் டோஸ் பெற்றவர்கள், 2வது டோஸ் பெறாவிட்டால், அபாயம் அதிகம். அவர்களுக்கு தொற்று ஏற்பட்டு, ஐ.சி.யு.,வில் சேர வேண்டியுள்ளது. 2வது டோஸ் பெறுவது நல்லது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X