சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விபத்தில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்த தன்னார்வலர்

Added : நவ 13, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில், விபத்தில் மரணம் அடைந்த ஆதரவற்றவர் உடலை, தன்னார்வலர்கள் அடக்கம் செய்தனர். காஞ்சிபுரம் பல்லவர்மேடு பகுதியைச் சேர்ந்தவர் சம்பத், 56. நேற்று முன்தினம், பஸ் நிலையத்தில் நடந்து சென்றபோது, பஸ் மோதி இறந்தார்.சிவ காஞ்சி போலீசார் விசாரணையில், இறந்தவருக்கு உறவினர்கள் யாருமில்லை என்பது தெரிந்தது.இதையடுத்து 'பசுமை புரட்சி எங்கள் முயற்சி' என்ற

காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில், விபத்தில் மரணம் அடைந்த ஆதரவற்றவர் உடலை, தன்னார்வலர்கள் அடக்கம் செய்தனர்.

காஞ்சிபுரம் பல்லவர்மேடு பகுதியைச் சேர்ந்தவர் சம்பத், 56. நேற்று முன்தினம், பஸ் நிலையத்தில் நடந்து சென்றபோது, பஸ் மோதி இறந்தார்.சிவ காஞ்சி போலீசார் விசாரணையில், இறந்தவருக்கு உறவினர்கள் யாருமில்லை என்பது தெரிந்தது.இதையடுத்து 'பசுமை புரட்சி எங்கள் முயற்சி' என்ற அமைப்பைச் சேர்ந்தோருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.

அவர்கள், இறந்தவர் உடலை அடக்கம் செய்வதற்கான வேலையை செய்தனர்.அமைப்பைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் கூறியதாவது:எங்கள் அமைப்பில் ஐந்து பேர் உள்ளனர். முதலில், மரக்கன்றுகள் நட விரும்புவோருக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கினோம்.பின் கொரோனா தொற்றால் இறந்தவரின் உடலை, அடக்கம் செய்தோம்.

இதுவரை, ஆதரவற்றோர் மற்றும் கொரோனா பாதிப்பில் இறந்தவர்கள் என, 60 பேரை அடக்கம் செய்துள்ளோம். அல்டாப், 45, ஜெகன்நாதன், 30, வரதராஜன், 31, மகேஷ், 20, ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.மரக்கன்றுகள் தேவைப்படுவோர், 5 கி.மீ., துாரத்திற்குள் இருந்தால், அவர்கள் இடத்திற்கு சென்று மரக்கன்று வழங்குகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X