செய்தி செய்தி

தமிழ்நாடு

'தினமும் 112 பேரிடர்கால சிறப்பு மருத்துவ முகாம்'

Added : நவ 13, 2021
Share
Advertisement
திருப்பூர்: ''திருப்பூர் மாவட்டத்தில், தினமும், 112 இடங்களில், பருவமழை மற்றும் பேரிடர்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்,''என, அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.பருவமழை காலத்தில் ஏற்படும் காய்ச்சல், வயிற்று போக்கு, சேற்றுப்புண் மற்றும் பிற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், நடமாடும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி,

திருப்பூர்: ''திருப்பூர் மாவட்டத்தில், தினமும், 112 இடங்களில், பருவமழை மற்றும் பேரிடர்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்,''என, அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.பருவமழை காலத்தில் ஏற்படும் காய்ச்சல், வயிற்று போக்கு, சேற்றுப்புண் மற்றும் பிற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், நடமாடும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில், 56 சுகாதாரத்துறை வாகனங்களில், டாக்டர்கள், செவிலியர்கள் அடங்கிய குழுவினர், மக்களை தேடிச்சென்று, மருத்துவ முகாம் நடத்த உள்ளனர்.கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் வினீத் தலைமையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், நடமாடும் சிறப்பு மருத்துவ முகாமை, அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்.அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோர், கொடியசைத்து துவக்கி வைத்தனர். எம்.பி., சுப்பராயன், டி.ஆர்.ஓ., சரவணமூர்த்தி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ஜெகதீஷ்குமார் உட்பட, டாக்டர்கள், செவிலியர்கள் பங்கேற்றனர்.அமைச்சர் சாமிநாதன் கூறியதாவது:மழைக்காலத்தில் ஏற்படும் பாதிப்புகளுக்கு, உடனுக்குடன் சிகிச்சை அளிக்கும் வகையில், நடமாடும் சிறப்பு மருத்துவ முகாம் நடக்கிறது. சளி மற்றும் காய்ச்சல் கண்டறிதல், காய்ச்சல் பாதித்தவர்களுக்கு ரத்த மாதிரி எடுத்து, தேவையெனில் உயர் சிகிச்சைக்கு பரிந்துரைத்தல்,பாதிக்கப்பட்ட பகுதியில் கிருமிநாசினி தெளித்தல், கொசு ஒழிப்புக்கான புகைப்பணி மேற்கொள்தல், சுத்தமான குளோரின் கலந்த குடிநீர் வழங்குவதை உறுதி செய்தல், தொற்று மற்றும் தொற்றா நோய் சிகிச்சை மற்றும் மருந்து வழங்குதல், கொரோனா தடுப்பூசி செலுத்துதல், கொரோனா அறிகுறி இருப்பவருக்கு சளி மாதிரி எடுத்தல் போன்ற பணிகள் நடக்கும்.மாவட்டத்தில், தினமும் 112 இடங்களில் பேரிடர் கால சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படும். பொதுமக்கள், இவ்வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். பாம்புக்கடி, நாய் கடிக்கும் சிகிச்சை பெறலாம். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில், இதுவரை, 1.05 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.இவ்வாறு, அமைச்சர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X