பொது செய்தி

தமிழ்நாடு

இலவச சட்ட உதவி மைய புகைப்பட கண்காட்சி

Added : நவ 13, 2021
Share
Advertisement
செங்கல்பட்டு : இலவச சட்ட உதவி மையம் பற்றிய விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சி, செங்கல்பட்டில் நடந்தது.செங்கல்பட்டு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், ஏழை எளிய மக்களுக்கு, நீதிமன்றத்தில் உள்ள இலவச சட்ட உதவி மையத்தின் செயல்பாடுகள் குறித்த, விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, புகைப்பட கண்காட்சி நடத்த முடிவு செய்யப்பட்டது.இலவச சட்ட உதவி மைய செயல்பாடுகள் குறித்த
 இலவச சட்ட உதவி மைய புகைப்பட கண்காட்சி

செங்கல்பட்டு : இலவச சட்ட உதவி மையம் பற்றிய விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சி, செங்கல்பட்டில் நடந்தது.செங்கல்பட்டு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், ஏழை எளிய மக்களுக்கு, நீதிமன்றத்தில் உள்ள இலவச சட்ட உதவி மையத்தின் செயல்பாடுகள் குறித்த, விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, புகைப்பட கண்காட்சி நடத்த முடிவு செய்யப்பட்டது.

இலவச சட்ட உதவி மைய செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சியை, முதன்மை மாவட்ட நீதிபதி மேவிஸ் தீபிகா சுந்தரவதனா, செங்கல்பட்டில் துவக்கி வைத்தார்.பொதுமக்கள் சார்ந்த பிரச்னைகள், குற்றவியல் வழக்கு, சாலை விபத்து உள்ளிட்ட அனைத்து வழக்குகளும் இலவசமாக நடத்தப்படும் தகவல் அடங்கிய துண்டு பிரசுங்களை, பொதுமக்களிடம் வழங்கினர்.

அதுசம்பந்தமாக கண் காட்சியில் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன.தலைமை குற்றவியல் நீதிபதி பிரியா, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் மீனாட்சி உட்பட, நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X