பொது செய்தி

இந்தியா

சின்ன சின்னதாய் செய்திகள்

Added : நவ 13, 2021
Share
Advertisement
சின்ன சின்னதாய்விநாயகர் கோவில் பூஜைமாலுார் மாஸ்தியில் உள்ள புராதன கோவில்களில் ஒன்றான ஸ்ரீ கோடி விநாயகர் கோவிலின் 'ஜீர்ணோதாரா' சிறப்பு பூஜைகள் நடக்கிறது.நேற்று நவசக்தி பீடாதிபதி ஸ்ரீ பகவான் விஷ்ணு தத்த குருஜி முன்னிலையில் கணபதி பூஜை, யமுனா பூஜை, நவக்கிரஹ பூஜை, கலச ஸ்தாபனம், நவக்கிரஹ மிருதுஞ்செய ஹோமம், தன்வந்திரி ஹோமம் நடந்தது.இன்று கலச ஆராதனை, சிறப்பு அலங்காரம்,

சின்ன சின்னதாய்விநாயகர் கோவில் பூஜை

மாலுார் மாஸ்தியில் உள்ள புராதன கோவில்களில் ஒன்றான ஸ்ரீ கோடி விநாயகர் கோவிலின் 'ஜீர்ணோதாரா' சிறப்பு பூஜைகள் நடக்கிறது.நேற்று நவசக்தி பீடாதிபதி ஸ்ரீ பகவான் விஷ்ணு தத்த குருஜி முன்னிலையில் கணபதி பூஜை, யமுனா பூஜை, நவக்கிரஹ பூஜை, கலச ஸ்தாபனம், நவக்கிரஹ மிருதுஞ்செய ஹோமம், தன்வந்திரி ஹோமம் நடந்தது.இன்று கலச ஆராதனை, சிறப்பு அலங்காரம், மஹா மங்களாரத்தி நடக்கிறதென கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

விளைபொருள்கள் நாசம்

கோலார் மாவட்டத்தில் அக்டோபரில் பெய்த தொடர் மழையால் 428 ஏக்கர் கேழ்வரகு, நிலக்கடலை மூழ்கி பாழாகியுள்ளது. .நவம்பரில் பெய்த மழையால் விளைச்சல்கள் பாழானது. துவரை மட்டுமே 4,431 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி நாசமானது. தக்காளி உட்பட காய்கறிகள் மழையில் நாசமானது.மழை ஓய்ந்த பின் விளைப்பயிர்கள் குறித்து சர்வே நடத்தி நிவாரண உதவிக்கு ஏற்பாடு செய்யப்படுமென கோலார் மாவட்ட விவசாயத்துறை இயக்குனர் ரூபாதேவி தெரிவித்துள்ளார்
ராம்புரா ஏரி நிரம்பியது

தங்கவயல் கேசம் பள்ளி அருகே உள்ள மஜூரா, ராம்புரா தொட்டகரே ஏரி 2007ல் தான் நிரம்பியது; அதன் பின், தற்போது தான் நிரம்பி வழிகிறது.இதனால் பல்வேறு கிராம விவசாயிகள், மீன் வளர்ப்போர், கால்நடைகள் வளர்ப்போர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

101 தேங்காய் உடைப்பு
கோலார் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சந்திரா ரெட்டிக்கு எம்.எல்.சி., தேர்தலில் சீட் கிடைக்க வேண்டும் என்பதற்காக அவரது ஆதரவாளர்கள் பங்கார்பேட்டையில் உள்ள ஸ்ரீ லட்சுமி வெங்கடேஸ்வரா கோவிலில் சிறப்பு பூஜை நடத்தினர். 101 தேங்காய் உடைத்தனர்.

மழைக்கு 2 வீடுகள் இடிந்தது

தொடர் மழையால் மாலுார் ஹுலிமங்களா கிராமத்தில் இரண்டு வீடுகள் இடிந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏற்படவில்லை.ஆயினும் வீட்டிலிருந்த டி.வி., எலக்ட்ரானிக் பொருட்கள், உணவுப்பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களும் நாசமானது.அக்கம் பக்கத்தினர் வந்து வீடிழந்த குடும்பத்தினருக்கு உதவிகள் செய்தனர். இரு குடும்பத்தினரையும் அருகே உள்ள கோவில் வராண்டாவில் தங்க உதவினர்.

சி.ஐ.டி.யு., போராட்டம்

கோலாரின் வடகூர் கிராமத்தில் அமைந்துள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் அருகில், பால் உற்பத்தியாளர்களுக்கு ஆதரவாக சி.ஐ.டி.யு., சங்கத்தினர் நேற்று தர்ணா நடத்தினர்.பால் கொள்முதல் விலை 26 ரூபாயில் இருந்து 24 ரூபாயாக குறைத்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.அனைத்து பொருட்களின் விலைகளும் உயர்ந்திருக்கும் போது பால் கொள்முதல் விலையை குறைத்திருப்பதை மறு பரிசீலனை செய்ய வேண்டுமென வலியுறுத்தினர்.கோலார் மாவட்ட கலெக்டர், கர்நாடக கூட்டுறவு துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளித்தனர்.

வாக்காளர் பட்டியல் தயார்'

'டிசம்பர் 10 ல் நடக்கும் மேலவை தேர்தலில் 5,598 பேர் வாக்காளர்கள். கோலார், சிக்கபல்லாப்பூர் ஆகிய இரண்டு மாவட்டங்களை சேர்ந்த உள்ளாட்சி அமைப்பினர் ஓட்டளிக்க உள்ளனர். வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது,'' என்று கோலார் மாவட்ட கலெக்டர் செல்வமணி தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X