வெங்கச்சேரி - மாகரல் செய்யாறு பாலம் 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பு

Added : நவ 13, 2021
Share
Advertisement
உத்திரமேரூர் : கடந்த 2015ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது, மாகரல் - வெங்கச்சேரி செய்யாற்று பாலம் உடைந்தது. இதனால், காஞ்சிபுரம் - உத்திரமேரூர் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, 50க்கும் மேற்பட்ட கிராமவாசிகள் அவதிஅடைந்தனர்.அதேபோல் தற்போது வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், பாலம் சேதமாவதை தடுக்க நெடுஞ்சாலைத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாலத்தை பலப்படுத்தி,
 வெங்கச்சேரி - மாகரல் செய்யாறு பாலம் 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பு

உத்திரமேரூர் : கடந்த 2015ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது, மாகரல் - வெங்கச்சேரி செய்யாற்று பாலம் உடைந்தது. இதனால், காஞ்சிபுரம் - உத்திரமேரூர் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, 50க்கும் மேற்பட்ட கிராமவாசிகள் அவதிஅடைந்தனர்.

அதேபோல் தற்போது வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், பாலம் சேதமாவதை தடுக்க நெடுஞ்சாலைத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாலத்தை பலப்படுத்தி, தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.உத்திரமேரூர் நெடுஞ்சாலைத் துறை உதவி இயக்குனர் அனந்தகல்யாணராமன் கூறியதாவது:

மழை வெள்ளத்தால் மண் அரிப்பு ஏற்பட்டு வெங்கச்சேரி பாலம் சேதமாவதை தடுக்கும் வகையில், 5 டன் சவுக்கு கம்புகள் நடப்பட்டு, கம்புகளுக்கு இடையே, 1,000 மணல் மூட்டைகள் மூலம் தடுப்பு அமைத்து, பாலத்தை பலப்படுத்தியுள்ளோம். இரவு, பகல் என தொடர்ந்து, பாலத்தை கண்காணித்து வருகிறோம்.வெங்கச்சேரியில் புதிய பாலம் அமைப்பதற்கான நிதி ஒதுக்கப்பட்டு, முதற்கட்ட மண் அடுக்குகளின் தன்மை குறித்து பரிசோதிக்க மண் மாதிரி எடுக்கப்பட்டு, ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஆற்றில் மழை நீர் வெள்ளம் சென்றாலும், இரு கரைகளிலும், மேடான பகுதியில் புதிய பாலத்திற்கான கட்டுமானப்பணி துவங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.விரட்டியடிக்கும் போலீசார்வெங்கச்சேரி தடுப்பணை நிரம்பி, செய்யாற்றில் மழை வெள்ளம் இரு கரைகளிலும் கரைபுரண்டு ஓடுகிறது. தடுப்பணை மற்றும் வெள்ள நீரில் பொதுமக்கள் குளிப்பதை தடுக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.ஆற்றில் இறங்கி குளிக்கவும், செல்பி எடுக்க செல்வோரை, மாகரல் போலீசார் விரட்டியடிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X