செய்தி செய்தி

தமிழ்நாடு

ராஜராஜனுக்கு சதய விழா பேரூரில் கொண்டாட்டம்

Added : நவ 13, 2021
Share
Advertisement
கோவை: பேரூரில் உள்ள திருவாவடுதுறை ஆதீனம் கிளை மடத்தில் ராஜராஜனின், 1036வது சதய விழா நேற்று கொண்டாடப்பட்டது.ஆறுமுக கவுண்டனுார் சீனிவாசன் தலைமையில், ராஜராஜனின் செப்பு உருவச்சிலைக்கு நன்னீராட்டு செய்யப்பட்டது. சிறப்பு சொற்பொழிவுக்கு தலைமை வகித்த, பேராசிரியர் லட்சுமிபதி ராஜ் பேசியதாவது:பிற்கால சோழர்கள் வரலாற்றில் நிலையான இடத்தையும், அழியாத புகழையும் பெற்றவர் ராஜராஜ

கோவை: பேரூரில் உள்ள திருவாவடுதுறை ஆதீனம் கிளை மடத்தில் ராஜராஜனின், 1036வது சதய விழா நேற்று கொண்டாடப்பட்டது.ஆறுமுக கவுண்டனுார் சீனிவாசன் தலைமையில், ராஜராஜனின் செப்பு உருவச்சிலைக்கு நன்னீராட்டு செய்யப்பட்டது. சிறப்பு சொற்பொழிவுக்கு தலைமை வகித்த, பேராசிரியர் லட்சுமிபதி ராஜ் பேசியதாவது:பிற்கால சோழர்கள் வரலாற்றில் நிலையான இடத்தையும், அழியாத புகழையும் பெற்றவர் ராஜராஜ சோழன். சேர, சோழ, பாண்டிய நாடுகளை வென்று ஆட்சி செய்ததால், மும்முடிச்சோழன் என்ற பெயரை பெற்றார். பெரும் படையை திரட்டி மேலைச்சாளுக்கிய மன்னனை வென்று, ஆட்சி அதிகாரத்தை வடக்கிலும் பரவச்செய்தார்.இன்றைக்கும் உலகம் வியந்து பார்க்கும் தஞ்சை பெரிய கோயிலை கட்டி, தமிழ் மண்ணுக்கும், மக்களுக்கும் பெருமை சேர்த்த மாமன்னனாக ராஜராஜன் விளங்குகிறார். ராஜராஜனின் சதய விழா தஞ்சை பகுதியில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கோவை பகுதியிலும் கொண்டாட வேண்டும் என்பதற்காக, இவ்விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.இவ்வாறு, அவர் பேசினார்.சொற்பொழிவாளர் ஆனந்தகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X