'பிட் காயின்' :போலீசார் பேசிய மொபைல் ஆடியோ

Added : நவ 13, 2021
Share
Advertisement
பெங்களூரு:'பிட் காயின்' விவகாரத்தில் பெரிய, பெரிய தலைவர்களுக்கு எல்லாம் தொடர்புள்ளது என இரண்டு போலீசார் மொபைலில் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கர்நாடக மாநிலத்தில் 'பிட் காயின்' விவகாரம் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் சி.ஐ.டி தலைமை ஏட்டு ஆகிய இருவரும் மொபைலில் 'பிட் காயின்'

பெங்களூரு:'பிட் காயின்' விவகாரத்தில் பெரிய, பெரிய தலைவர்களுக்கு எல்லாம் தொடர்புள்ளது என இரண்டு போலீசார் மொபைலில் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் 'பிட் காயின்' விவகாரம் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் சி.ஐ.டி தலைமை ஏட்டு ஆகிய இருவரும் மொபைலில் 'பிட் காயின்' சம்பந்தமாக பேசும் ஆடியோ ஒன்று சமூக வலை தளத்தில் வெளியாகி உள்ளது.
தலைமை ஏட்டு: ஒவ்வொரு நாளும் 'பிட் காயின்' மதிப்பு ஏற்ற இறக்கமாக உள்ளது சார்
'மாஜி' சப் - இன்ஸ்பெக்டர் : குத்துமதிப்பாக இன்றைய 'பிட் காயின்' மதிப்பு என்ன.
தலைமை ஏட்டு: இன்று 56 லட்சம் ரூபாய் சார்.
'மாஜி' சப் - இன்ஸ்பெக்டர் : அவனுடைய வங்கி கணக்கில் இருந்து யார் யாருக்கு பணம் சென்று உள்ளது.தலைமை ஏட்டு: பெரிய பெரிய தலைவர்கள் எல்லாம் இருக்கின்றனர். ஆனால் பெயர் சரியாக தெரியவில்லை. அமைச்சர் லெவலில் உள்ளவர்கள், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உள்ளனர்.

உளவு துறை தலைவர் தயானந்தை சி.ஐ.டி சைபர் பிரிவு எஸ்.பி., சரத் சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.இது போல மூன்று நிமிட ஆடியோ வெளியாகி உள்ளது.இதையடுத்து தலைமை ஏட்டு மீது சி.ஐ.டி., - டி.ஜி.பி., ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.


நட்பு ஏற்பட்டது எப்படி?

இதற்கிடையில், 'பிட் காயின்' ஸ்ரீகிருஷ்ணாவுக்கும், மேற்கு வங்கத்தை சேர்ந்த ராபின் கன்டலுக்கும் நட்பு ஏற்பட்டது எப்படி என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.மேற்கு வங்கம் கொல்கத்தாவை சேர்ந்தவர் ராபின் கன்டல் லால், 32. இவரது தந்தை 'ரைஸ் மில்' நடத்தி வருகிறார்.'ராபின் ஆன்லைன் டிரேடிங்' என்ற பெயரில், 2016ல், பிட் காயின் வர்த்தகத்தை துவங்கினார்.
2017 ஏப்ரலில் லோக்கல் 'பிட் காயின் டாட் காம்' என்ற இணையம் மூலம் ஸ்ரீகிருஷ்ணாவுடன் அறிமுகம் ஏற்பட்டது.தன்னிடம் உள்ள 900 பிட் காயின்களை விற்று தருமாறு ஸ்ரீகிருஷ்ணாவிடம் கூறினார். அதன்படி 30 பிட் காயின்களை விற்று கொடுத்து கமிஷன் பெற்று கொண்டார்.

2018ல் பெங்களூரு ஐ.டி.சி., கார்டேனியா ஓட்டலில் இருவரும் சந்தித்தனர். அப்போது தன் நண்பர்களான முகமது நலபாடு, சவும்யா, சோனு, ஆகீப் ஆகியோரை ராபின் அறிமுகப்படுத்தி வியாபாரத்தை தொடர்ந்தார்.பின் யு.பி., சிட்டி கலாட்டாவில் சிக்கிய ஸ்ரீகிருஷ்ணா, கொல்கத்தாவுக்கு தப்பி ஓடினார். அவருக்கு ராபின் அடைக்கலம் கொடுத்தார்.

பின் படிப்படியாக 'பிட் காயின்' விற்பனை மூலம் 4.98 கோடி பணம் கொடுத்துள்ளார். ஸ்ரீகிருஷ்ணா கூறியபடி இந்த பணம் அவரது நண்பர்கள் கணக்குக்கு பரிமாற்றம் செய்யப்பட்டதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X