அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க.,அரசு திட்டங்களை தி.மு.க.,முடக்கி விட்டது: பழனிசாமி குற்றச்சாட்டு

Updated : நவ 15, 2021 | Added : நவ 13, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
சென்னை :''அ.தி.மு.க., அரசு செயல்படுத்திய திட்டங்களை, தி.மு.க., அரசு முடக்கி உள்ளது. ஸ்டாலின் தலைமையிலான அரசு திறமை இல்லாத அரசாக உள்ளது,'' என எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி தெரிவித்தார். சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, சென்னை திருவொற்றியூர், மாதவரம், கொரட்டூர், ஆவடி, பூந்தமல்லி பகுதிகளில், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். பொதுமக்களுக்கு நிவாரண
அ.தி.மு.க., அரசு திட்டங்கள், தி.மு.க.,  பழனிசாமி குற்றச்சாட்டு

சென்னை :''அ.தி.மு.க., அரசு செயல்படுத்திய திட்டங்களை, தி.மு.க., அரசு முடக்கி உள்ளது. ஸ்டாலின் தலைமையிலான அரசு திறமை இல்லாத அரசாக உள்ளது,'' என எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி தெரிவித்தார்.
சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, சென்னை திருவொற்றியூர், மாதவரம், கொரட்டூர், ஆவடி, பூந்தமல்லி பகுதிகளில், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார்.

அப்போது, அவர் அளித்த பேட்டி:
கனமழையால் பல்வேறு வீதிகளில், தண்ணீர் குளம் போல தேங்கி நிற்கிறது. மழை முடிந்து எட்டு நாட்களாகியும், தண்ணீர் வெளியேற்றப்படவில்லை. மழை நீருடன் கழிவு நீர் கலந்து, விஷக்காய்ச்சல் ஏற்படும் சூழல் உள்ளது. மக்களுக்கு சிகிச்சை அளிக்க, மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும். அ.தி.மு.க., அரசு, சரியான வடிகால் வசதி செய்யவில்லை என்று முதல்வர் பொய்யான செய்திகளை கூறுகிறார். ஏராளமான பணிகளை செய்துள்ளோம்.
ஆவடி திருமுல்லைவாயல் பகுதியில் காவலர் குடியிருப்பு; பட்டாபிராமில் டைடல்பார்க் முதல் திட்டப்பகுதி பணி முடிக்கப்பட்டும் இன்னும் திறக்கப்படவில்லை.

சூப்பர் முதல்வர் ஸ்டாலின் என்கின்றனர். பதவியேற்று ஆறு மாதங்களாகியும், அ.தி.மு.க., அரசு நிறைவேற்றிய பணிகளை கூட, அவரால் திறந்து வைக்க முடியவில்லை.
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, மத்திய அரசு ஒதுக்கிய நிதியை, தமிழக அரசு பெற்றுத் தராததால், அம்பத்துார் தொழிற்பேட்டையில், 600 சிறு, குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். கனமழையால் டெல்டா மாவட்டங்களில், 5 லட்சம் ஏக்கரில் பயிர்கள் மூழ்கி உள்ளன. விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்.

ஒரு ஹெக்டேருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு தர வேண்டும்.
திறமையில்லாத அரசாக, ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., அரசு உள்ளது, தற்போது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. அவர் திட்டமிட்டு செயல்பட தவறிவிட்டார்; திட்டமிட்டு செயல்பட்டிருந்தால் பாதிப்பை குறைத்திருக்கலாம். அ.தி.மு.க., அரசு செயல்படுத்திய திட்டங்களை, தி.மு.க., அரசு முடக்கி உள்ளது. அம்மா கிளினிக் செயல்பட்டிருந்தால், மக்களுக்கு மருத்துவ சிகிச்சை கிடைத்திருக்கும். அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். ஆனால், தேவையான உணவு பொருட்களை வழங்கவில்லை. வழக்கமான பொருட்களே வழங்கப்படுவதால், கூடுதலாக சாப்பிட வரும் மக்களுக்கு, உணவு வழங்க முடியாத நிலை உள்ளது.இவ்வாறு பழனிசாமி கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan - Thanjavur ,இந்தியா
14-நவ-202120:09:26 IST Report Abuse
Mohan சாமி உங்க திட்டங்களை எல்லாமே 10 வருஷ உங்க ஆட்சியிலேயே நிறைவேற்றி இருக்கலாமே. சரி சரி உங்க மடைய அடச்சி அவங்க மடைய தொறந்து விட்டாச்சு.
Rate this:
Cancel
amuthan - kanyakumari,இந்தியா
14-நவ-202120:07:21 IST Report Abuse
amuthan இப்படி மழை நாட்களில் தயவு செய்து அரசியல் செய்யாதீர்கள்
Rate this:
Cancel
TamilReader - Dindigul,இந்தியா
14-நவ-202120:06:12 IST Report Abuse
TamilReader ஆம்... அ.தி.மு.க., அரசு கொள்ளை அடிக்கும் திட்டங்களை தி.மு.க.,முடக்கி விட்டது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X