பொது செய்தி

தமிழ்நாடு

முடக்கம்! டூ கன மழையால் 40க்கும் மேற்பட்ட கிராமங்கள்

Added : நவ 13, 2021
Share
Advertisement
கன மழை வெள்ளத்தால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் பல பகுதிகளில் சாலை துண்டிக்கப்பட்டு, 40க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். போக்குவரத்து இல்லாததால், பணிக்கு செல்ல முடியாமல், பிற வசதிகள் கிடைக்காமல் தவிப்போரின் நிலைமையை சீராக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பரா என கேள்வி எழுந்துள்ளது.காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், ஒரு வாரமாக பெய்த
 முடக்கம்! டூ  கன மழையால் 40க்கும்  மேற்பட்ட கிராமங்கள்கன மழை வெள்ளத்தால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் பல பகுதிகளில் சாலை துண்டிக்கப்பட்டு, 40க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
போக்குவரத்து இல்லாததால், பணிக்கு செல்ல முடியாமல், பிற வசதிகள் கிடைக்காமல் தவிப்போரின் நிலைமையை சீராக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பரா என கேள்வி எழுந்துள்ளது.காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், ஒரு வாரமாக பெய்த தொடர் மழை காரணமாக, ஆறு, குளம், ஏரிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சாலை துண்டிக்கப்பட்டதால், போக்குவரத்து வசதி இல்லாமல், பல தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் பலரும் தவித்துவருகின்றனர்.செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே, பாலாறு இரண்டு ஆறுகளாக பிரிந்து, தனித்தனி ஆற்றுப்படுகைகளாக அமைந்துள்ளன.இவற்றின் இடையே இரும்புலிச்சேரி, எடையாத்துார் ஆகிய ஊராட்சிப் பகுதிகள் அமைந்து, தீவு பகுதியாக உள்ளன. இரு ஊராட்சிப் பகுதிகளும் 3 கி.மீ., தொலைவில் அடுத்தடுத்து உள்ளன.

அலைச்சல்இப்பகுதியினர் அத்தியாவசிய தேவைகள், கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றுக்கு, திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றனர்.எடையாத்துார் பகுதியினர், எடையாத்துார் - பாண்டூர் இடையே கட்டப்பட்ட புதிய ஆற்றுப்பாலத்தை கடந்து, வல்லிபுரம் சாலை வழியே பல இடங்களுக்கு பயணிக்கின்றனர்.இரும்புலிச்சேரி பகுதியினர், கல்பாக்கம், திருக்கழுக்குன்றம் பகுதிகளுக்கு, பழைய ஆற்றுப்பாலத்தை கடந்து சென்றனர்.கடந்த 30 ஆண்டுகள் பழமையான பாலம், 2015 வெள்ளப்பெருக்கில் தகர்ந்து, தீவு பகுதி துண்டிக்கப்பட்டது.

போக்குவரத்து அவசியம் கருதி, பழைய பாலத்திற்கு சற்று தொலைவு கிழக்கில், ஆற்றில் கான்கிரீட் குழாய்கள் பொருத்தி, தற்காலிக பாலம் மண் பாதையுடன் அமைக்கப்பட்டது.இப்பாலமும் பராமரிப்பின்றி சீரழிந்து, தற்போதைய வெள்ளப்பெருக்கில் துண்டிக்கப்பட்டது.இப்பகுதியினர் எடையாத்துார் - பாண்டூர் வழியே சென்று திரும்ப, 10 கி.மீ., தொலைவு சுற்றுப்பாதையில் கடந்து மிகவும் சிரமப்படுகின்றனர்.

மதுராந்தகம் அடுத்த ஈசூர்- வல்லிபுரம் பாலாறு தடுப்பணையில் இருந்து, வினாடிக்கு 44 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேறுகிறது.இதனால் ஈசூர் அருகே, வல்லிபுரம் இணைப்பு சாலையின் தரைப்பாலம் நீரில் மூழ்கியுள்ளது.திருக்கழுக்குன்றம் அடுத்த பாண்டூர், வழுதுார், நீலமங்களம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தோர், மதுராந்தகம் செல்ல இயலாமல் மிகவும் சிரமப்பட்டுகின்றனர். இருபுறங்களிலும் சேர்த்து எட்டு கிராம மக்கள் தவிக்கின்றனர்.

காஞ்சிபுரம் பாலாற்றில் வினாடிக்கு 40 ஆயிரம் கன அடி நீர் செல்கிறது. செய்யாற்றிலும் 10 ஆயிரம் கன அடி நீர் செல்கிறது.மேலும், காஞ்சிபுரத்தின் மிகப்பெரிய ஏரிகளான பிள்ளைப்பாக்கம், தென்னேரி, தாமல், மணிமங்கலம் ஆகிய ஏரிகள் முழுமையாக நிரம்பி வழிகின்றன. வாலாஜாபாத் - -அவளூர் இடையே உள்ள பாலாற்று பாலத்தை மீறி தண்ணீர் செல்கிறது.இதனால், அவளூர், கம்மராஜபுரம், இளையனார்வேலுார் போன்ற கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். களக்காட்டூர் வழியாக வாலாஜாபாத் செல்ல, 15 கி.மீ., சுற்றிச்செல்ல வேண்டியுள்ளதாக கிராமத்தினர் தெரிவிக்கின்றனர்.

மொத்தம் 15 கிராமங்களில் பாதிப்பு உள்ளது.அதேபோல், காஞ்சிபுரம் அடுத்த பெரும்பாக்கம் கிராமத்தில், பாலாறு தரைப்பாலத்தை மீறி தண்ணீர் செல்வதால், போக்குவரத்து தடைபட்டுள்ளது.காஞ்சிபுரத்தில் இருந்து பெரும்பாக்கம் வழியாக வடஇலுப்பை, பிரம்மதேசம் மற்றும் ஆற்காடு செல்லும் வழியில், பஸ் போக்குவரத்து இன்றி அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.காஞ்சிபுரம் செல்ல வேண்டுமானால், ஓச்சேரி வழியாக சுற்றிச்செல்ல வேண்டும்

அல்லது வெம்பாக்கம், அய்யங்கார்குளம் வழியாக செல்ல வேண்டும். இப்பகுதியில் எட்டு கிராமங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.அடையாறு ஆற்றிலிருந்து வெளியேறும் தண்ணீர், வரதராஜபுரம் பகுதியில் தாம்பரம் -- சோமங்கலம் நெடுஞ்சாலையில் செல்வதால், அந்த சாலைதுண்டிக்கப்பட்டுள்ளது.அவ்வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும், மாற்று வழியில், குன்றத்துார், பல்லாவரம் வழியாக, கூடுதலாக 15 கி.மீ., சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. 10 கிராமங்களில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி கிடைக்காமல் பொதுமக்கள் தவிக்கின்றனர்.படகு விட முடியவில்லைகடந்த 2015க்கு பின்,

இந்தாண்டு தான் பாலாற்றில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வாலாஜாபாதில் உள்ள தரைப்பாலத்தில் தண்ணீர் செல்கிறது. பொதுமக்கள் யாரும் ஆறு அருகில் செல்லாதவாறு, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாலாஜாபாதிலிருந்து அவளூர், இளையனார்வேலுார் ஆகிய பகுதிகளுக்கு, வெங்கச்சேரி வழியாக பஸ்களை இயக்க போக்குவரத்து கழகத்திடம் சொல்லியுள்ளோம்.

அதன்படி, பஸ்களும் அவ்வழியே இயக்கப்படுகிறது. வாலாஜாபாத்தில் படகு இயக்கலாம் என யோசித்தோம். ஆனால், அதிகளவில் தண்ணீர் செல்வதால், படகு விட முடியவில்லை.ஆர்.பன்னீர்செல்வம்,மாவட்ட வருவாய் அலுவலர், காஞ்சிபுரம்.பள்ளிகள் திறந்தால் பிரச்னைஎங்கள் ஊராட்சியில், 3,000 பேர் வசிக்கின்றனர். மற்ற இடங்களுக்கு நெரும்பூர், திருக்கழுக்குன்றம் வழியே சென்று வருவோம். பழைய பாலம் இடிந்ததால், தற்காலிக பாலம் வழியே சென்றோம். இந்த பாலமும் வெள்ளத்தில் மூழ்கி அழிந்தது. எடையாத்துார், பாண்டூர் சுற்றி செல்வது சிரமம். வெளியூர் வேலைக்கு செல்வோர், வீட்டில் முடங்கி பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அதிகாரிகள் பார்வையிட்டதோடு சரி. குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட பிற உதவிகள் வழங்கவில்லை. பள்ளிகள் திறந்தால், திருக்கழுக்குன்றம், கல்பாக்கம் பகுதிகள் சென்று படிப்பவர், நிச்சயம் பாதிக்கப்படுவர். எங்கள் பாதிப்பை உணர்ந்து,

அரசு உதவ வேண்டும்.எம்.சஞ்சய்காந்தி, 39, விவசாயி, இரும்புலிச்சேரி,19 குடும்பத்தினர் தவிப்புஉத்திரமேரூர் ஒன்றியம், நாஞ்சீபுரம் ஊராட்சி, இருளர், அருந்ததியர் குடியிருப்பில் 19 வீடுகள் உள்ளன.இப்பகுதிக்கு செல்லும் சாலையின் குறுக்கே உள்ள சிறுபாலம் துார்ந்துள்ளதால், மழை நீர் வெளியேறவில்லை என, சிறுபாலம் அருகில் சாலை துண்டிக்கப்பட்டு மழைநீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இதனால், இருளர் மற்றும் அருந்ததியர் குடியிருப்பைச் சேர்ந்தோர், பிரதான சாலைக்கு வெளியே சென்று வர அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

- நமது நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X