தமிழ்நாடு

வெளிநாட்டு மாணவர்கள் ஆவணம் சரிபார்க்க அறிவுரை

Added : நவ 13, 2021
Share
Advertisement
கோவை: வெளிநாட்டு மாணவர்களை அனுமதிக்கும் முன் ஆவணங்களை சரிபார்க்க பாராதியார் பல்கலை கட்டுப்பாட்டில் செயல்படும் கல்லுாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.பாரதியார் பல்கலையின் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில், 120 அங்கீகாரம் பெற்ற கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லுாரிகளில், பல்வேறு நாடுகளில் இருந்து மாணவர்கள் பயின்று வருகின்றனர்.கடந்த சில

கோவை: வெளிநாட்டு மாணவர்களை அனுமதிக்கும் முன் ஆவணங்களை சரிபார்க்க பாராதியார் பல்கலை கட்டுப்பாட்டில் செயல்படும் கல்லுாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.பாரதியார் பல்கலையின் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில், 120 அங்கீகாரம் பெற்ற கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லுாரிகளில், பல்வேறு நாடுகளில் இருந்து மாணவர்கள் பயின்று வருகின்றனர்.கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிநாட்டு மாணவர் ஒருவர் விசா உள்ளிட்ட ஆவணங்கள் இன்றி கல்லுாரியில் பயின்றது தெரிந்தது. இதையடுத்து, வெளிநாட்டு மாணவர்களுக்கான கட்டுப்பாடுகளை பாரதியார் பல்கலை அதிகரித்துள்ளது.பல்கலை கட்டுப்பாட்டில் உள்ள கல்லுாரிகள், வெளிநாட்டு மாணவர்களை அனுமதித்த பின் அவர்களது பாஸ்போர்ட், விசா, பார்ம் 'சி' மற்றும் 'எஸ்' உள்ளிட்ட ஆவணங்களை ஒவ்வொரு தேர்வுக்கு முன்னரும், பல்கலைக்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.பல்கலை நிர்வாகத்தினர் கூறுகையில்,'கல்லுாரிகள் வெளிநாட்டு மாணவர்கள் அனுமதியில் வழக்கமான நடைமுறை பின்பற்றப்படும். பல்கலை அதில் தலையிடாது. மாணவர்கள் குறித்த ஆவணங்களை மட்டும் அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டவருக்கான மண்டல பதிவு அலுவலகத்தில் சோதிக்கப்படும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X