வாக்காளர்கள் பதிவு பார்வையாளர் ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர்கள் பதிவு பார்வையாளர் ஆய்வு

Added : நவ 13, 2021
Share
மாமல்லபுரம் ; மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகள் நடந்த வாக்காளர் பதிவு சிறப்பு முகாம்களில், பார்வையாளர் ஆய்வு செய்தார்.தமிழகத்தில், 2022 ஜனவரியில், 18 வயது நிறைவு பெற்றோர், வாக்காளராக பதிந்து பட்டியலில் இடம்பெற, தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.இதையடுத்து, ஓட்டுச்சாவடிகளில் நேற்று, சிறப்பு முகாம் துவங்கியது. இன்றும், நவ., 27, 28 ஆகிய நாட்களிலும் நடக்கிறது.வாக்காளராக பெயர்

மாமல்லபுரம் ; மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகள் நடந்த வாக்காளர் பதிவு சிறப்பு முகாம்களில், பார்வையாளர் ஆய்வு செய்தார்.தமிழகத்தில், 2022 ஜனவரியில், 18 வயது நிறைவு பெற்றோர், வாக்காளராக பதிந்து பட்டியலில் இடம்பெற, தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இதையடுத்து, ஓட்டுச்சாவடிகளில் நேற்று, சிறப்பு முகாம் துவங்கியது. இன்றும், நவ., 27, 28 ஆகிய நாட்களிலும் நடக்கிறது.வாக்காளராக பெயர் சேர்க்க, நீக்க, திருத்த, முகவரி மாற்ற என விண்ணப்பம் பெறப்படுகிறது.இப்பணி பார்வையாளர் அனில் மேஷ்ராம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் தாலுகா ஓட்டுச்சாவடிகளில் ஆய்வு செய்தார்.மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளில், மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல்ராஜ், திருக்கழுக்குன்றம் தாசில்தார் சிவசங்கரனுடன் ஆய்வு செய்தார்.தொடர்ந்து அவர் கூறுகையில், ''773 பகுதிகளில், 2,795 ஓட்டுச்சாவடிகளில் நடக்கும் சிறப்பு முகாம்களில், விண்ணப்பங்களை முறையாக பரிசீலித்து பதிய அறிவுறுத்தியுள்ளோம்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X