பொது செய்தி

தமிழ்நாடு

பழையசீவரம் அணையை ஐ.ஐ.டி., ஆய்வு செய்யணும்!

Added : நவ 13, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம் : பழையசீவரம் தடுப்பணையை, ஐ.ஐ.டி., குழுவை கொண்டு ஆய்வு செய்ய வேண்டும் என, பாலாறு பாதுகாப்பு கூட்டியக்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.தமிழக ஆறுகள் வளமீட்பு மற்றும் பாலாறு படுகை குறித்த கலந்துரையாடல், காஞ்சிபுரத்தில் நேற்று நடந்தது.இந்நிகழ்வில், பாலாறு பாதுகாப்பு கூட்டியக்கம் ஒருங்கிணைப்பாளர் காஞ்சி அமுதன், தெலங்கானா வாட்டர் போர்ட் ஆணையர் பிரகாஷ்ராவ்

காஞ்சிபுரம் : பழையசீவரம் தடுப்பணையை, ஐ.ஐ.டி., குழுவை கொண்டு ஆய்வு செய்ய வேண்டும் என, பாலாறு பாதுகாப்பு கூட்டியக்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

தமிழக ஆறுகள் வளமீட்பு மற்றும் பாலாறு படுகை குறித்த கலந்துரையாடல், காஞ்சிபுரத்தில் நேற்று நடந்தது.இந்நிகழ்வில், பாலாறு பாதுகாப்பு கூட்டியக்கம் ஒருங்கிணைப்பாளர் காஞ்சி அமுதன், தெலங்கானா வாட்டர் போர்ட் ஆணையர் பிரகாஷ்ராவ் மற்றும் பலர் பங்கேற்றனர்.தமிழகத்தில் உள்ள ஆறுகளின் தற்போதைய தன்மை, ஆக்கிரமிப்பு மற்றும் ஆற்றில் கலக்கப்படும் கழிவுகள் குறித்தும் ஆறுகளை வளமுடன் எப்படி வைத்துக்கொள்வது என்பது குறித்தும் கலந்துரையாடல் நடந்தது.

நிகழ்ச்சியில், பாலாறு மற்றும் வேகவதி ஆறு சம்பந்தமான ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை:l பாலாற்றின் வளத்தை மேம்படுத்த வேண்டும். ஆக்கிரமிப்பை அகற்றி, மாநகராட்சி கழிவு நீரை கொட்டுவதை தடுக்க வேண்டும்l பாலாற்றை பாதுகாக்க வட்டார அளவில் குழுக்களை உருவாக்க வேண்டும்l

பழையசீவரத்தில் கட்டிய தடுப்பணை செயலிழந்துவிட்டது. அரும்புலியூர் ஏரிக்குகூட தண்ணீர் செல்லவில்லை. ஐ.ஐ.டி., குழுவை வைத்து ஆய்வு நடத்த வேண்டும்l வேகவதி ஆற்றை குறைந்தபட்சம், 300 மீட்டர் அகலமாவது இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.l தமிழக மொத்த ஆறுகள் வளம் மீட்பு குறித்து, முதல்வரை சந்தித்து, முறையீடு செய்ய வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X