தென் மாவட்ட ரயில்கள் மீண்டும் இயக்க கோரிக்கை| Dinamalar

செய்தி செய்தி

தமிழ்நாடு

தென் மாவட்ட ரயில்கள் மீண்டும் இயக்க கோரிக்கை

Added : நவ 13, 2021
Share
கோவை: தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க ரயில்வே பயணிகள் சேவை குழுவிடம் வலியுறுத்தப்பட்டது.கோவை ரயில்வே ஸ்டேஷனில், பொன் பாலகணபதி உட்பட பயணிகள் சேவை குழு உறுப்பினர்கள் நேற்று ஆய்வு செய்தனர். கோவை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி ஆகிய ரயில்வே ஸ்டேஷன்களில் ஆய்வு மேற்கொண்ட குழுவினர் பயணிகளின் குறைகளை கேட்டறிந்தனர்.தென் மாவட்டங்களுக்கு முன்பு

கோவை: தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க ரயில்வே பயணிகள் சேவை குழுவிடம் வலியுறுத்தப்பட்டது.கோவை ரயில்வே ஸ்டேஷனில், பொன் பாலகணபதி உட்பட பயணிகள் சேவை குழு உறுப்பினர்கள் நேற்று ஆய்வு செய்தனர். கோவை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி ஆகிய ரயில்வே ஸ்டேஷன்களில் ஆய்வு மேற்கொண்ட குழுவினர் பயணிகளின் குறைகளை கேட்டறிந்தனர்.தென் மாவட்டங்களுக்கு முன்பு இயக்கப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும். பாலக்காடு கோட்டத்தில் உள்ள தமிழக பகுதிகளை சேலம் கோட்டம் அல்லது மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது. பொள்ளாச்சி - திருச்செந்துார் வரை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலை மேட்டுப்பாளையம் வரை நீட்டிக்க வேண்டும் எனவும், கோரிக்கை விடப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X