பொது செய்தி

தமிழ்நாடு

மொபைல் போன் பறிப்பு மூவர் கும்பலுக்கு வலை

Added : நவ 13, 2021
Share
Advertisement
சென்னை : சென்னையில், 'பல்சர்' பைக்கில் உலா வந்து, பல்வேறு இடங்களில் மொபைல் போன் பறிப்பில் ஈடுபட்ட மூவர் கும்பல் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.ஜாம்பஜார், பாரதி சாலையைச் சேர்ந்தவர் சஷ்டி நாதன், 27. இவர், ராயப்பேட்டையில் பிரபல மாலில் உள்ள உணவகத்தில் மேலாளராக பணி புரிந்து வருகிறார்.இவர், பணி முடிந்து நேற்று முன்தினம் நள்ளிரவு, சி.பி., சாலை வழியாக நடந்து சென்றார்.

சென்னை : சென்னையில், 'பல்சர்' பைக்கில் உலா வந்து, பல்வேறு இடங்களில் மொபைல் போன் பறிப்பில் ஈடுபட்ட மூவர் கும்பல் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

ஜாம்பஜார், பாரதி சாலையைச் சேர்ந்தவர் சஷ்டி நாதன், 27. இவர், ராயப்பேட்டையில் பிரபல மாலில் உள்ள உணவகத்தில் மேலாளராக பணி புரிந்து வருகிறார்.இவர், பணி முடிந்து நேற்று முன்தினம் நள்ளிரவு, சி.பி., சாலை வழியாக நடந்து சென்றார். அப்போது, பைக்கில் வந்த மூன்று பேர், அவரது மொபைல் போனை பறித்துச் சென்றனர். அண்ணா சாலை போலீசார் விசாரிக்கின்றனர்.

சிந்தாதிரிப்பேட்டை: சிந்தாதிரிப்பேட்டை, நியூ பங்களா தெருவைச் சேர்ந்தவர் முருகன், 24. இவர், அக்ரஹாரம் தெருவில் உள்ள பாலகத்தில் பணி புரிகிறார். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து, அருணாசலம் சாலை வழியாக நடந்து சென்றார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் மூவர், அவரது மொபைல் போனை பறித்து சென்றனர். சிந்தாதிரிப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.எழும்பூர்: ஆயிரம்விளக்கு, சுதந்திரா நகரைச் சேர்ந்தவர் சாம்சன், 23. இவர், 'ஆன்லைன்' உணவு டெலிவரி நிறுவனமான 'ஸ்விகி'யில் பணி புரிகிறார்.

நேற்று முன்தினம் இரவு, காந்தி இர்வின் சாலையில் நின்று மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், அவரது மொபைல் போனை பறித்து சென்றனர். எழும்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.மேற்கண்ட மூன்று சம்பவங்களில் ஈடுபட்டது, 'பல்சர்' பைக்கில் 'ஹெல்மெட்' அணியாமல் வந்த மூவர் கும்பல் என, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X