பொது செய்தி

தமிழ்நாடு

மெல்ல சீராகிறது மின் வினியோகம்

Added : நவ 13, 2021
Share
Advertisement
சென்னை : சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், பல இடங்களில், கனமழை காரணமாக ஏற்பட்ட மின் தடை சீரானது.தமிழக மின் வாரியம், சென்னையில் சில இடங்களில் தரைக்கு அடியில் கேபிள்; மற்ற இடங்களில் மின் கம்பம் மேல் செல்லும் கம்பிகள் வாயிலாக, டிரான்ஸ்பார்மர், மின் வினியோக பெட்டி உதவியுடன் மின் வினியோகம் நடக்கிறது.சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில்

சென்னை : சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், பல இடங்களில், கனமழை காரணமாக ஏற்பட்ட மின் தடை சீரானது.

தமிழக மின் வாரியம், சென்னையில் சில இடங்களில் தரைக்கு அடியில் கேபிள்; மற்ற இடங்களில் மின் கம்பம் மேல் செல்லும் கம்பிகள் வாயிலாக, டிரான்ஸ்பார்மர், மின் வினியோக பெட்டி உதவியுடன் மின் வினியோகம் நடக்கிறது.சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இம்மாதம் 6ம் தேதி முதல் 11ம் தேதி வரை கன மழை பெய்தது.இதனால் சாலைகளில் பல அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியதால், தாழ்வான பகுதிகளில் இருந்த மின் வினியோக பெட்டிகள் தண்ணீரில் மூழ்கின. மின் விபத்து ஏற்படாமல் இருக்க, பாதுகாப்பு கருதி அந்த பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்பட்டது.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் பல இடங்களில் மின் கம்பங்களில் உள்ள, 'மின் இன்சுலேட்டர்' கருவி பழுதானதால் மின் தடை ஏற்பட்டது. அவற்றை கொட்டும் மழையிலும், மின் ஊழியர்கள் துரிதகதியில் சரிசெய்தனர்.மேலும், மின் வினியோக சாதனங்களை சூழ்ந்திருந்த தண்ணீரை அகற்றும் பணியிலும் விரைந்து ஈடுபட்டனர்.

இதனால், மழையால் மின் தடை ஏற்பட்ட பல பகுதிகளில், நேற்று முதல் சீராக மின் வினியோகம் செய்யப்படுகிறது.எங்கெங்கு பாதிப்பு!தண்ணீர் வடியாமல் உள்ள பெரம்பூரில் ஜவஹர் நகர், பின்னி மில், மணலி, சி.பி.சி.எல்., நகர், வட பெரும்பாக்கம், மாத்துார், கண்ணதாசன் நகர், மந்தைவெளி வி.ஜி.கார்டன், தி.நகரில் சீதையம்மாள் காலனி, புளியந்தோப்பு, ஓட்டேரி ஆகிய இடங்கள் வெள்ளக்காடாக உள்ளன. அப்பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. தண்ணீர் வடிவதற்கு ஏற்ப, மீண்டும் மின்சாரம் வழங்கப்பட உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X