பொது செய்தி

இந்தியா

 சீக்ரெட் சிங்காரம்

Added : நவ 13, 2021
Share
Advertisement
தத்தளிக்கிறது ஹாசன் மாவட்டம் புல்லுக்கட்டோட பாதுகாப்பான கோட்டை என நம்பி இருக்காங்க.ஆனால் அசம்பிளி தொகுதியில் ஹாசன் தொகுதி பூ பக்கம் மாறியது. எம்.எல்.சி.,யாக இருப்பவர் கை காரர்.இங்கு அரசியல் செல்வாக்கு 'மிக்சர்' போல கலந்திருக்கு. எப்படியேனும் கை வசம் உள்ள எம்.எல்.சி., பதவியை பறிக்க பூ காரங்களும், புல்லுக்கட்டு காரணங்களும் சம பலத்தில் கை காரர்களை காலை வார

தத்தளிக்கிறது ஹாசன் மாவட்டம்

புல்லுக்கட்டோட பாதுகாப்பான கோட்டை என நம்பி இருக்காங்க.ஆனால் அசம்பிளி தொகுதியில் ஹாசன் தொகுதி பூ பக்கம் மாறியது. எம்.எல்.சி.,யாக இருப்பவர் கை காரர்.இங்கு அரசியல் செல்வாக்கு 'மிக்சர்' போல கலந்திருக்கு. எப்படியேனும் கை வசம் உள்ள எம்.எல்.சி., பதவியை பறிக்க பூ காரங்களும், புல்லுக்கட்டு காரணங்களும் சம பலத்தில் கை காரர்களை காலை வார துடிக்கிறாங்க.

இங்கு 3,385 கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் இருக்காங்க. 196 நகராட்சி உறுப்பினர்கள், 7 எம்.எல்.ஏ.,க்கள், ஒரு எம்.பி., என 3,589 வாக்காளர்கள் சேர்ந்து ஒரு எம்.எல்.சி.,யை தேர்ந்தெடுக்க வேணும்.எங்க கட்சி தான் ஜெயிக்க போகுதுன்னு மூன்று கட்சிகளுமே உதட்டளவில் சொல்லி வாரங்களே தவிர, வாக்காளர்களை நெனச்சாலே இதயம் பட படக்குதாம்.

'மாஜி' பி.எம்., இந்த தொகுதியை புல்லுக்கட்டு பக்கமாக்க மகனான 'மாஜி' மந்திரி, பேரனான செங்கோட்டைகாரரின் பொறுப்பில் கவனிக்க சொல்லி இருக்காரு.பூ மணக்கும் கலபுரகி!கலபுரகி, யாத்கிர் ரெண்டு தொகுதிக்கு சேர்த்து ஒரு எம்.எல்.சி., இருக்காரு.

தற்போது பவரில் இருப்பவர் பூக்காரர். ஒரு காலத்தில் கல்புர்கி கை காரர்களோட அசைக்க முடியாத கோட்டையா இருந்தது. அதை பூக்காரங்க உடைத்து பிரிச்சி எடுத்திட்டாங்க.ரெண்டு மாவட்டத்தில் 13 எம்.எல்.ஏ.,க்கள் இருக்காங்க. இதில் பூ காரங்க 7, கை காரங்க 5, ஒரு புல்லுக்கட்டு.உள்ளாட்சி அமைப்புகளை சேர்த்து 7,050 வாக்காளர் இருக்காங்க. இப்பவே பூ வாசம் அங்கே மண மணக்குதாம்.இதனால் புல்லுக்கட்டு சீட் போடுவது

ஜெயிக்க அல்ல. சிலரின் வெற்றியை தடுக்க பிரயோஜனமாக போகுது. கை காரங்க வேட்பாளர் தேர்வின் சிக்கல் இன்னும் தீரலையாம்.வளர்த்த கடா முட்டுது!மைசூரு, சாம்ராஜ் நகர் மாவட்ட புல்லுக்கட்டு காரர்களின் 'ஜனதா சங்கமா' நிகழ்ச்சி, பூங்கா நகர் ஹெட் ஆபிசில் நடந்தது.மைசூரு எம்.எல்.சி., கட்சியை துறந்து மூன்றாண்டு கடந்து போயிருக்கு. துரோகம் செய்வோரை தோளில் துாக்க வேண்டியதில்லை. 'பழைய மைசூரு' நமது. இதில் மாற்று கட்சியினரை தலை துாக்க விடாதபடி 'மாஜி' சி.எம்., பூஸ்ட் கொடுத்திருக்காரு.மைசூரு, மாண்டியா, ராம்நகர், சாம்ராஜ்நகர் என நான்கு மாவட்டங்களையும் 'உஷார்' படுத்த தொண்டர்களை ஊக்கப்படுத்த தலைவர்களுக்கு உத்தரவு போட்டிருக்காரு.பிற கட்சியில் இருக்கும் பெரிய தலைவர்கள் எல்லாம், புல்லுக்கட்டு கட்சியில் வளர்ந்து, விட்டு சென்றவர்கள் தான் என் பட்டியலை வாசித்து கலங்கினாராம்.

தேர்தல் நேரத்தில் 'பிட்''பிட் காயின்' ஊழலில் ஆளுங்கட்சி முக்கிய புள்ளி இருக்கிறாரா, இல்லையா எங்களுக்கு தெரியாது.இந்த விசாரணை முடியும் வரை பதவியில் இருக்கலாமா என்று எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் கேள்வி கேட்டிருக்காரு.போலீஸ் துறையில் தான் இந்த முறைகேடு சம்மதம் இருப்பதால் உச்சநீதிமன்றம் வரை விசாரணை நடத்த வேணும்னு அவர் கேட்டிருக்காரு.தேர்தல் நேரம் பார்த்து எதிர்க்கட்சினா ஏதாச்சும் ஒரு 'பிட்' போடுவாங்க. அது, பிட் காயின் ரூபத்தில் வந்திருக்காம்.அரசியல்ல இதெல்லாம் சகஜம் தானேன்னு பூக்காரங்க 'இதுவும் கடந்து போகும்னு' அலட்டலே இல்லாமல் அசால்டா இருக்காங்க; ஆடல; அசரல.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X