தேர்தலில் போட்டியிட தம்பிக்கு வாய்ப்பு: முதல்வரிடம் அமைச்சர் வலியுத்தல்

Added : நவ 13, 2021
Share
Advertisement
பெங்களூரு:தனது சகோதரர் லக்கனுக்கு மேலவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டுமென முதல்வர் பசவராஜ் பொம்மையை சந்தித்து முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி வலியுறுத்தியதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.ஆபாச 'சிடி' வழக்கில் சிக்கி அமைச்சர் பதவியை இழந்த ரமேஷ் ஜார்கிஹோளி பெங்களூரு ஆர்.டி.நகர் இல்லத்தில் முதல்வர் பசவராஜ் பொம்மையை சந்தித்தார். அவருடன் சகோதரர்

பெங்களூரு:தனது சகோதரர் லக்கனுக்கு மேலவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டுமென முதல்வர் பசவராஜ் பொம்மையை சந்தித்து முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி வலியுறுத்தியதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆபாச 'சிடி' வழக்கில் சிக்கி அமைச்சர் பதவியை இழந்த ரமேஷ் ஜார்கிஹோளி பெங்களூரு ஆர்.டி.நகர் இல்லத்தில் முதல்வர் பசவராஜ் பொம்மையை சந்தித்தார். அவருடன் சகோதரர் லக்கன் ஜார்கிஹோளியும் இருந்தார்.இந்த சந்திப்பு அரை மணி நேரம் நடந்தது.உள்ளாட்சி அமைப்புகள் மூலம் மேலவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் தேர்தல் டிசம்பர் 10ல் நடக்கிறது.

இதில் பெலகாவியில் இரண்டு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க முடியும். பா.ஜ., காங்கிரஸ் தலா ஒன்றில் வெற்றி பெற வாய்ப்புள்ளது.பெலகாவிக்கு தற்போதைய உறுப்பினர் மஹாந்தேசுக்கு டிக்கெட் வழங்க பா.ஜ., முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த டிக்கெட்டை தன் சகோதருக்கு வழங்குமாறு முதல்வரிடம் ரமேஷ் ஜார்கிஹோளி கேட்டுள்ளார் என கூறப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X