தமிழ்நாடு

மாணவி தற்கொலையில் நீடிக்கும் மர்மம்: உறவினர்கள், மாணவர்கள் போராட்டம்

Added : நவ 13, 2021
Share
Advertisement
கோவை: பள்ளி மாணவி தற்கொலையில் பல்வேறு மர்மங்கள் நீடிப்பதால், போலீசார் உரிய விசாரணை நடத்தி தீர்வு காண வேண்டும் என பெற்றோர், மாணவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.கோவையில், 17 வயது பிளஸ் 2 மாணவி நேற்று முன்தினம் துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். மாணவி முன்பு படித்த பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக இருந்த மிதுன் சக்கரவர்த்தி,35, தற்கொலைக்கு காரணம் என புகார் எழுந்த நிலையில், அவரை
 மாணவி தற்கொலையில் நீடிக்கும் மர்மம்: உறவினர்கள், மாணவர்கள் போராட்டம்


கோவை: பள்ளி மாணவி தற்கொலையில் பல்வேறு மர்மங்கள் நீடிப்பதால், போலீசார் உரிய விசாரணை நடத்தி தீர்வு காண வேண்டும் என பெற்றோர், மாணவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கோவையில், 17 வயது பிளஸ் 2 மாணவி நேற்று முன்தினம் துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். மாணவி முன்பு படித்த பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக இருந்த மிதுன் சக்கரவர்த்தி,35, தற்கொலைக்கு காரணம் என புகார் எழுந்த நிலையில், அவரை போலீசார் போக்சோ பிரிவில் கைது செய்தனர்.தொடர்ந்து, போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, வரும் 26ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, மிதுன் சக்கரவர்த்தி உடுமலை சிறையில் அடைக்கப்பட்டார்.மாணவி புகார் அளித்தும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காத, பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சன்,52, மீதும் நேற்று போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. கோவை மேற்கு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தற்கொலைக்கு முன், மாணவி எழுதியதாக கூறப்படும் கடிதத்தில், ஆசிரியர் மற்றும் வேறு இருவர் குறித்தும் குறிப்பிட்டுள்ளார். மற்ற இருவர் மீதும் போலீசார் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை; அவர்களுக்கும் மாணவிக்கும் என்ன தொடர்பு, பின்னணியில் யாரேனும் இருக்கிறார்களா என பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.


மாணவர்கள் போராட்டம்

பள்ளி மாணவியின் தற்கொலைக்கு நீதி கேட்டு, கோவை அரசு மருத்துவமனை பிணவறை முன் உறவினர்களும், மாணவர்களும் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி, பதாகைகளை ஏந்தியபடி கோஷமிட்டனர். மாணவியின் வீட்டின் முன்பும், மாணவர்கள், பொதுமக்கள் திரண்டனர்.சபரிமாலா கைதுபள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மதுரையை சேர்ந்த முன்னாள் ஆசிரியை சபரிமாலா, கோவை செஞ்சிலுவை சங்கம் முன் நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை ரேஸ்கோர்ஸ் போலீசார் அப்புறப்படுத்தி, வாகனத்தில் அழைத்து சென்றனர். அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக, அவரை கைது செய்த போலீசார், உடனடியாக ஜாமினில் விடுவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X