தேவையற்ற விஷயங்களுக்கு அரசியல் செய்யக்கூடாது:

Added : நவ 13, 2021
Share
Advertisement
பெங்களூரு:''அபிவிருத்திக்காக, அரசியல் செய்ய வேண்டுமே தவிர, தேவைaயற்ற விஷயங்களுக்கு அரசியல் செய்யக்கூடாது. பிட் காயின் வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர்களிடம், ஆவணங்கள் இருந்தால், அதை வெளியிட தாமதிப்பது ஏன்,'' என முதல்வரின் அரசியல் செயலர் ரேணுகாச்சார்யா கேள்வியெழுப்பினார்.பெங்களூரு ஆர்.டி.நகரின் முதல்வர் பசவராஜ் பொம்மை இல்லம் அருகில் ரேணுகாச்சார்யா

பெங்களூரு:''அபிவிருத்திக்காக, அரசியல் செய்ய வேண்டுமே தவிர, தேவைaயற்ற விஷயங்களுக்கு அரசியல் செய்யக்கூடாது. பிட் காயின் வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர்களிடம், ஆவணங்கள் இருந்தால், அதை வெளியிட தாமதிப்பது ஏன்,'' என முதல்வரின் அரசியல் செயலர் ரேணுகாச்சார்யா கேள்வியெழுப்பினார்.

பெங்களூரு ஆர்.டி.நகரின் முதல்வர் பசவராஜ் பொம்மை இல்லம் அருகில் ரேணுகாச்சார்யா கூறியதாவது:

பிட் காயின் வழக்கை, மாநில அரசு அமலாக்கத்துறை, இன்டர் போலிசிடம் ஒப்படைத்துள்ளது. காங்கிரசாரிடம் ஆவணங்கள் இருந்தால், வெளியிட தாமதம் காண்பிப்பது ஏன்.வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் மகன்களின் பெயர் அடிபடுகிறது. குற்றப்பத்திரிகையிலும் கூறப்பட்டுள்ளது. ஆவணங்கள் கிடைத்தால், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து, நடவடிக்கை எடுக்கலாம்.சட்டத்தை விட, யாரும் பெரியவர்கள் அல்ல. தவறு செய்தோர் யாராக இருந்தாலும் தண்டனை கிடைக்கும். ஆவணங்கள் இருந்தால் வெளியிடும்படி முதல்வர் பசவராஜ் பொம்மை ஏற்கனவே கூறியுள்ளார்.

காங்கிரசாரின் குற்றச்சாட்டில் உண்மையில்லை. மக்களுக்கு பிட் காயின் என்றால் என்ன வென்றே தெரியாது. காங்கிரசாருக்கு தெரியுமா.பிரியங்க் கார்கே, அரசியலுக்கு வருவதற்கு முன், அவரது சொத்து மதிப்பு எவ்வளவு; இப்போது அதன் மதிப்பு எவ்வளவு என்பதை பொது மக்களிடம் பகிரங்கப்படுத்த வேண்டும்.காங்., மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குறித்து, நான் பேசவில்லை. அவர் மீது எங்களுக்கு கவுரவம் உள்ளது.

ஆனால் பிரியங்க் கார்கே, எங்கள் கட்சி தலைவர்கள் மற்றும் கட்சி தலைவர்கள் பற்றி பேசுகிறார். இவர் கொள்ளையடித்து சம்பாதிக்கிறார்.ஊழலுக்கு மற்றொரு பெயரே காங்கிரஸ். பிட் காயின் வழக்கில் தங்கள் கட்சியினர் சிக்கியிருக்கலாம் என்ற பீதியில், எங்கள் கட்சி மீது குற்றம் சாட்டுகிறார்.அரசு விசாரணைக்கு உத்தரவிட்ட பின், அவ்வப்போது அது பற்றி பேசுவது சரியல்ல. அபிவிருத்திக்காக, அரசியல் செய்ய வேண்டுமே தவிர, தேவையற்ற விஷயங்களுக்கு அரசியல் செய்யக்கூடாது.

வெறும் அரசியலுக்காக எதிர்க்கட்சியினர் இருக்கக்கூடாது; அரசு தவறு செய்யும் போது, எச்சரிக்க வேண்டும். அரசியலுக்காக குற்றம் சாட்டுவதென்றால், காங்கிரஸ் மீது நாங்களும் பல குற்றச்சாட்டுகளை சுமத்தலாம்.எதிர்க்கட்சியினர் சர்வாதிகாரி தோரணை காண்பிக்கக்கூடாது. மக்களை திசை திருப்புவதை நிறுத்த வேண்டும். அபிவிருத்தி விஷயத்தில் அரசுக்கு ஆலோசனை கூற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X