பொது செய்தி

தமிழ்நாடு

லட்சம் பேருக்கு இன்று தடுப்பூசி

Added : நவ 13, 2021
Share
Advertisement
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் இன்று எட்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது. மாவட்டம் முழுவதும், 667 இடங்களில், ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.கலெக்டர் வினீத் அறிக்கை:நாளை (இன்று)மாவட்டத்தில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில், 18 வயதுக்கு மேற்பட்ட, 19 லட்சத்து, 95 ஆயிரத்து, 300 பேர் உள்ளனர். இதுவரை, 16 லட்சத்து, 70

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் இன்று எட்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது. மாவட்டம் முழுவதும், 667 இடங்களில், ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.கலெக்டர் வினீத் அறிக்கை:நாளை (இன்று)மாவட்டத்தில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில், 18 வயதுக்கு மேற்பட்ட, 19 லட்சத்து, 95 ஆயிரத்து, 300 பேர் உள்ளனர். இதுவரை, 16 லட்சத்து, 70 ஆயிரத்து, 289 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி, ஆறு லட்சத்து, 35 ஆயிரத்து, 290 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.மூன்று லட்சத்து, 25 ஆயிரத்து, 11 பேருக்கு முதல் தவணையும், இரண்டு லட்சத்து, 54 ஆயிரத்து 084 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்த வேண்டியுள்ளது. இன்று எட்டாவது மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது.இதில், ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 587 நிலையான முகாம்கள், 80 நடமாடும் முகாம்கள் என மொத்தம், 667 முகாம்களில் காலை, 7:00 முதல் இரவு, 7:00 மணி வரை தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம், ஊட்டச்சத்து மையம், பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட், சுங்கச்சாவடி மற்றும் தனியார் மருத்துவமனை ஆகிய இடங்களிலும் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.மாவட்டத்தில் உள்ள பல்வேறு துறைகளை சேர்ந்த, 2,968 பணியாளர் மற்றும் தன்னார்வலர்கள் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட உள்ளனர். போதிய அளவு தடுப்பூசி இருப்பு உள்ளது. இதுவரை தடுப்பூசி செலுத்தாத, 18 வயதை கடந்தவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.இவ்வாறு, கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X