பொது செய்தி

இந்தியா

நடிகை ரசிதா ராம் மன்னிப்பு

Added : நவ 13, 2021
Share
Advertisement
பெங்களூரு : பாடல் வெளியீட்டு விழாவில் மறைந்த நடிகர் புனித்துக்கு அவமானம் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், நடிகை ரசிதா ராம் மன்னிப்பு கேட்டுள்ளார்.பெங்களூரு தனியார் ஓட்டலில் நேற்று முன்தினம் இரவு 'ஏக் லவ்யா' படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது.இதில் நடிகையர் ரசிதா ராம், ரக்சிதா பிரேம் உட்பட பட குழுவினர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பட குழுவினர்,
நடிகை ரசிதா ராம் மன்னிப்பு

பெங்களூரு : பாடல் வெளியீட்டு விழாவில் மறைந்த நடிகர் புனித்துக்கு அவமானம் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், நடிகை ரசிதா ராம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

பெங்களூரு தனியார் ஓட்டலில் நேற்று முன்தினம் இரவு 'ஏக் லவ்யா' படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது.இதில் நடிகையர் ரசிதா ராம், ரக்சிதா பிரேம் உட்பட பட குழுவினர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பட குழுவினர், 'சாம்பெயின்' பாட்டிலை குலுக்கி ஆரவாரம் செய்தனர்.அப்போது அங்கிருந்த திரையில் பாடல் வரிகளுக்கு பதிலாக நடிகர் புனித்துக்கு இரங்கல் தெரிவிக்கும் போட்டோ ஒளிபரப்பாகி கொண்டிருந்தது.

இச்சம்பவத்தால் புனித்துக்கு அவமானம் ஏற்பட்டுள்ளதாக அவரின் ரசிகர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், படத்தின் கதாநாயகி ரசிதா ராம் டுவிட்டரில் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.பாடல் வெளியீட்டு விழாவில் நடந்த சம்பவத்தால் எல்லோருக்கும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அந்த படத்தின் ஒரு பாகமாக இருப்பதால் மன்னிப்பு கேட்கிறேன்.

புனித்துக்கு அவமானம் ஏற்படுத்தும் நோக்கமோ அல்லது எண்ணமோ யாருக்கும் கிடையாது. எதிர்பாராதவிதமாக நடந்து விட்டது. தவறுக்கு ரசிகர்கள் மன்னிக்க வேண்டும் என, கூறி உள்ளார்.நடிகை ரக்சிதா பிரேமும், 'புனித்துக்கு யாராலும் அவமானம் ஏற்படுத்த முடியாது' என, கூறி உள்ளார்.இதை ஏற்றுக்கொள்ளாத புனித் ரசிகர்கள் படக்குழுவினருக்கு சமூக வலைதளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X