தமிழ்நாடு

கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்: குரு பெயர்ச்சி விழா கோலாகலம்!

Updated : நவ 14, 2021 | Added : நவ 13, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், குரு பெயர்ச்சியையொட்டி, ஸ்ரீதட்சிணாமூர்த்தி சுவாமிக்கு மகா அபிேஷகம் நடந்தது.நவக்கிரகங்களின் குருவாக விளங்கும் குருபகவான், ஒவ்வொரு ராசியிலும் ஓராண்டு தங்கியிருந்து, அதற்கு தகுந்தபடி பலன்களை வழங்குகிறார். மகரம் ராசியில் இருந்த குருபகவான், நேற்று மாலை, கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார்.குருபெயர்ச்சியை
கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்: குரு பெயர்ச்சி விழா கோலாகலம்!

திருப்பூர்:திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், குரு பெயர்ச்சியையொட்டி, ஸ்ரீதட்சிணாமூர்த்தி சுவாமிக்கு மகா அபிேஷகம் நடந்தது.
நவக்கிரகங்களின் குருவாக விளங்கும் குருபகவான், ஒவ்வொரு ராசியிலும் ஓராண்டு தங்கியிருந்து, அதற்கு தகுந்தபடி பலன்களை வழங்குகிறார். மகரம் ராசியில் இருந்த குருபகவான், நேற்று மாலை, கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார்.குருபெயர்ச்சியை முன்னிட்டு, கோவில்களில் உள்ள நவகிரக மண்டலத்தில், குருபகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.

விநாயகர் கோவில் மற்றும் சிவாலயங்களில் உள்ள ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு, சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன.குருபெயர்ச்சியை முன்னிட்டு, சிறப்பு யாகபூஜைகளும் நடந்தன. குருபெயர்ச்சி விழாவையொட்டி, ஸ்ரீதட்சிணாமூர்த்தி சுவாமிக்கு, மஞ்சள் நிற வஸ்திரம் அணிவிக்கப்பட்டு அருள்பாலித்தார். பக்தர்கள், சுண்டல் கடலை மாலையை அணிவித்து, வழிபட்டனர்.அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தில் நடந்த, குருபெயர்ச்சி பூஜையில், தரையில், ராசிக்கட்டம் அமைத்து, அதில், குரு பெயர்ச்சி ஆகும் காட்சிகளை நடத்தி, சிறப்பு பூஜைகளை நடத்தினர்.
இதேபோல, திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில், திருப்பூர் மற்றும் நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில், பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில், ஊத்துக்குளி ரோடு காசிவிஸ்வநாதர் கோவில், பல்லடம் சித்தம்பலம் நவகிரக கோட்டை உட்பட, மாவட்டத்திலுள்ள அனைத்து சிவாலயங்களிலும், குருபெயர்ச்சி சிறப்பு வழிபாடு பூஜைகள் நடந்தன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X