சாலையில் கழிவுநீர் தேக்கம்| Dinamalar

சாலையில் கழிவுநீர் தேக்கம்

Added : நவ 13, 2021
Share
கமுதி-கமுதி அருகே நீராவி பஜாரில் சாலையில் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கியிருப்பதால் மக்கள்நடப்பதற்கே சிரமப்படுகின்றனர்.நீராவி பஜாரில் 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இங்கு வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியில்லாமல்சாலையில் தேங்கி நிற்கிறது. இவ்வழியே கடந்து செல்லும் கரிசல்குளம், சின்னகரிசல்குளம், தோப்ப நத்தம்

கமுதி-கமுதி அருகே நீராவி பஜாரில் சாலையில் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கியிருப்பதால் மக்கள்நடப்பதற்கே சிரமப்படுகின்றனர்.நீராவி பஜாரில் 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இங்கு வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியில்லாமல்சாலையில் தேங்கி நிற்கிறது. இவ்வழியே கடந்து செல்லும் கரிசல்குளம், சின்னகரிசல்குளம், தோப்ப நத்தம் கிராமத்திற்கு சரக்குவாகனம், டூவீலர் செல்லமுடியாமல் சிரமப்படுகின்றனர். இரவு நேரத்தில் விபத்து அபாயம் உள்ளது. மேலும் கழிவுநீர் தேங்கியிருப்பதால் கொசுக்கள்உற்பத்தியாகி நோய் பரவும் அச்சத்தில் மக்கள் உள்ளனர்.எனவே நீராவி பஜாரில் சாலையோரத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X