4 ஆண்டுகளாக பஸ் வசதி இல்லை: மனு அளித்தும் பயன் இல்லை

Added : நவ 13, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்-ராமநாதபுரம் அருகே இளமனுார், மேலக்கோட்டை உள்ளிட்ட 5 கி.மீ., தொலைவிலான கிராமங்களுக்கு அரசு பஸ் போக்குவரத்து கடந்த நான்கு ஆண்டாக நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் இயக்க பலமுறை மனு அளித்தும் பலனில்லை, வாடகை வாகனங்கள் மற்றும் நடந்து சென்று சிரமப்படுவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.ராமநாதபுரத்திலிருந்து அரண்மனை, கேணிக்கரை வழியாக இந்திரா நகர், காட்டூரணி,

ராமநாதபுரம்-ராமநாதபுரம் அருகே இளமனுார், மேலக்கோட்டை உள்ளிட்ட 5 கி.மீ., தொலைவிலான கிராமங்களுக்கு அரசு பஸ் போக்குவரத்து கடந்த நான்கு ஆண்டாக நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் இயக்க பலமுறை மனு அளித்தும் பலனில்லை, வாடகை வாகனங்கள் மற்றும் நடந்து சென்று சிரமப்படுவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ராமநாதபுரத்திலிருந்து அரண்மனை, கேணிக்கரை வழியாக இந்திரா நகர், காட்டூரணி, இளமனுார், மேலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வந்த அரசு டவுன் பஸ் 2ஏ ஒரு நாளைக்கு ஐந்து முறை கிராமத்திற்குவந்துள்ளது. வசூல் குறைவு, ரோடு சரியில்லை உள்ளிட்ட காரணங்களால்கடந்த 4 ஆண்டுகளாக பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.சுற்று வட்டார கிராம மக்கள் அவதிக்குஉள்ளாகின்றனர். வாடகை வாகனங்கள் மற்றும் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது ரோடு நன்றாக உள்ளதால் மீண்டும் பஸ் இயக்க மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.இளமனுாரைச் சேர்ந்த சாந்தமூர்த்தி கூறியதாவது:'எங்கள் கிராமத்திற்கு நான்கு ஆண்டுகளாக பஸ் போக்குவரத்து இல்லை. இதனால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், கூலி வேலைக்கு செல்லக்கூடியவர்கள் சிரமப்படுகின்றனர். இது குறித்து ராமநாதபுரம் போக்குவரத்து கழக மேலாளர், மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் முன்பு இயக்கிய அரசு பஸ்சை இயக்க வழிவகை செய்ய வேண்டும்,' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X