கஞ்சா விற்கும் தகவல் கொடுத்தவருக்கு வெட்டு 

Added : நவ 13, 2021
Share
Advertisement
கோவை: கோவையில், கஞ்சா விற்பனை செய்வது குறித்து போலீசாருக்கு தகவல் சொன்னவரை வெட்டிய சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கோவை ராமநாதபுரம், பெரியார் நகரை சேர்ந்தவர் கிளி மணிகண்டன்,23; பெயின்டர். இவர் வசிக்கும் பகுதியில், வினோத்,24 என்பவர், நண்பர்களுடன் சேர்ந்து கஞ்சா விற்பனை செய்துள்ளார். ராமநாதபுரம் போலீசில் மணிகண்டன் புகார் செய்ததால், அவர்களை போலீசார் தேடி வந்தனர்.

கோவை: கோவையில், கஞ்சா விற்பனை செய்வது குறித்து போலீசாருக்கு தகவல் சொன்னவரை வெட்டிய சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கோவை ராமநாதபுரம், பெரியார் நகரை சேர்ந்தவர் கிளி மணிகண்டன்,23; பெயின்டர். இவர் வசிக்கும் பகுதியில், வினோத்,24 என்பவர், நண்பர்களுடன் சேர்ந்து கஞ்சா விற்பனை செய்துள்ளார். ராமநாதபுரம் போலீசில் மணிகண்டன் புகார் செய்ததால், அவர்களை போலீசார் தேடி வந்தனர். இச்சூழலில், மணிகண்டன் தன் நண்பரை பார்க்க, சடையப்பன் வீதியில் நடந்து சென்றுள்ளார். வினோத், மனோஜ், அவரது நண்பர்கள் 3 பேர், அவரை பின்தொடர்ந்து சென்று, கத்தியால் மணிகண்டனின் தலை, மார்பு மற்றும் கைகளில் வெட்டி விட்டு தப்பிச்சென்றனர். ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த மணிகண்டனை அங்கிருந்தவர்கள் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.தகவலறிந்த ராமநாதபுரம் போலீசார், கொலை முயற்சி வழக்குபதிவு செய்து, வினோத்தை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள, 4 பேரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X