பொது செய்தி

தமிழ்நாடு

புறநகர் ரயில்களில் கட்டுப்பாடு நீக்கம்.

Added : நவ 13, 2021
Share
Advertisement
சென்னை : புறநகர் மின்சார ரயில்களில் கட்டுப்பாடுகள் நீக்கம் செய்யப்பட்டதையடுத்து, நாளை முதல் அனைத்து பயணியரும் பயணிக்கலாம்.சென்னை ரயில்வே கோட்டத்தில், சென்ட்ரல் மூர் மார்க்கெட் ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, சூலுார்பேட்டை உட்பட ஐந்து வழித்தடங்களில் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.இந்த ரயில்களில், மாதாந்திர சீசன் டிக்கெட்

சென்னை : புறநகர் மின்சார ரயில்களில் கட்டுப்பாடுகள் நீக்கம் செய்யப்பட்டதையடுத்து, நாளை முதல் அனைத்து பயணியரும் பயணிக்கலாம்.சென்னை ரயில்வே கோட்டத்தில், சென்ட்ரல் மூர் மார்க்கெட் ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, சூலுார்பேட்டை உட்பட ஐந்து வழித்தடங்களில் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்த ரயில்களில், மாதாந்திர சீசன் டிக்கெட் வாங்கி பயணம் செய்வதற்கு, கொரோனா தடுப்பூசி இரண்டு 'டோஸ்' செலுத்தியிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்தது. இந்த கட்டுப்பாடு நீக்கப்படுகிறது.நாளை முதல் அனைத்து பயணியரும், மாதாந்திர சீசன் டிக்கெட் வாங்கி பயணிக்கலாம். மேலும், யு.டி.எஸ்., 'மொபைல் போன்' செயலி வாயிலாக தினமும் மற்றும் மாதாந்திர சீசன் டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம்.

குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரத்து

கேரளாவில் சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூருக்கு இயக்க வேண்டிய, குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X